Posts

Showing posts with the label Poetry

Rules and Rulers

Image
 In the original story of Sakuntala, as told in the Mahabhratha, there is no ring. Sakuntala appears in Dushmanta's court with their son and requests Dushmanta to declare him the heir to his throne, as he had promised her, before their gandharva vivāham. Though Dushmanta very much remembers their encounter (and thus recognises legitimacy of the claim), he still pretends not to remember and asks her provocative, insulting questions in his court.  But he is ' being cruel only to be kind '. For, this sets the dramatic stage for  a fine articulation of her case by Sakuntala, which ends in the divine voice from the sky, declaring her to be true and for Dushmanta to accept her and their son. And then, Dushmanta tells his courtiers that he always knew but his word would have been insufficient proof to the court. We are of course, more aware of the storyline of KāLidāsa's play abhijñānasākuntalam, where the poet made significant departures. The elevation of the 'word/memory...

39

Lines On Facing Forty                                  by Ogden Nash I have a bone to pick with Fate. Come here and tell me, girlie, Do you think my mind is maturing late, Or simply rotted early? 37 ,  36 ,  34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

From Each

Image
  This post got me - rather tangentially - thinking of a poem by the Soviet  children's poet Sergei Mikhalkov. You're going to have to read a bunch of irrelevant ramblings before you can read the poem at the end of the post.  The book is slightly older than me. A hand-me down from a family friend. Preserved atypically carefully by me to hand-down. The 'tone' of the poems and stories from the Soviet stand out so distinctly. They are fun without being didactic. But they are consciously infusing a certain 'spirit' that runs through as a theme. In some ways that feels more 'complete' than the (understandable) Indian anxiety to ensconce in a tradition or devolve(!) to absurd fun.  I was conversing with a cousin of mine a few days back about just how much Indian childhood, of a certain kind, was infused with so much knowledge of Soviet. I used to get the Soviet children's monthly MISHA by book-post . There used to even be section where the same crossword ...

தெள்ளிய சிங்க தேவு

Image
  இன்று நரஸிம்ஹ ஜெயந்தி. இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை. Dasavatara Cave, Ellora. Shot in 2015. விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம்.  ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே. சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு.   அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை. ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி.  அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன? Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்:    A.K.Ramanujan (wiki)                            assassin  of certitudes, slay now my...

மிகவோர் காலம் இனியில்லை

மத்தேயு 8 21 யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். 22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும் ” என்றார். திருவாசகம் - யாத்திரைப்பத்து நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. ⁠

மத்தம்

நற்றிணை 12 பாடியவர்: கயமனார் துறை: பாலை Vaidehi Herbert’s translation விளம்பழம் கமழும் கம்ஞ்சூல் குழிசிப்     பாசம் தின்ற தேய் கால் மத்தம்              நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்  வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்   அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்   'இவை காண்தொறும் நோவர் மாதோ ; அளியரோ அளியர்  என் ஆயத்தோர்!' என  நும்மொடு வரவு தான் அயரவும்,  தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே Wood apple fragrances in pots that are filled with curds, their noisy churning rods tied to posts and reduced by circling ropes, are the first sounds of dawn when darkness leaves. She hides her body well and removes from her feet beautiful jingling anklets, and along with her ball, so splendidly decorated with lines, places them aside. “Whenever they see these, they’ll be sad,” she thinks about her pitiful friends and tears come to her eyes beyond control, e...

இருவேறு சரிகள்

வயதாக ஆக, there is nothing either good or bad, but thinking makes it so என்றெல்லாம் சொல்பவன் to be or not to be என்று அவதிப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.  ஆனால், individual agency மீதே சகலபாரத்தையும் போட்டுவிட்டு வருத்தப்பட்டு சுமப்பவனாக  இருக்க மறுப்பவனையும் லேசில் அணுகமுடிவதில்லை. அவன் வேறுவகையான ஆளாக இருக்கிறான். அவனை எட்டிநின்று nobleஆக காணலாம். ஆனால் அவனை ஆகர்ஷித்துவிட்ட விழுமியங்களை ஸ்திரமான அணுகிவிடத்தான் முடியுமா? சிரமமே.  மகாபாரதத்தில் விகர்ண வதம் பதினான்காம் நாள் போர் அன்று நிகழ்கிறது. பீமனை எதிர்கொளும் ஏழு கௌரவர்கள் இறக்க, எட்டாவதாய் விகர்ணன் எதிர்படுகிறான். திரௌபதிக்கு அவமான நிகழ்ந்த சபையில் எதிர்க்குரல் எழுப்பிய ஒரே கௌரவன் விகர்ணன். இதை மறவாத பீமன் இவ்வாறு உரைக்கிறான் :

உண்கள்வார்

மரணத்தருவாயில் வாலி ராமனிடம் ஒன்று கேட்கிறான்: ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால் பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு:  பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன்,  பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது  தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.

கல் தோன்றிய காலம்

Image
அகலிகை எப்போது கல்லானாள்? புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம் பரிபாடல் 19ல்   திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது 50-52 வரிகள்: ... இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும் கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள். பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே? ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

சிவராத்திரி

Image
துடியிடை மடமகள் சரிபாதி உடலினில் இடந்தரு பதியோனே விடமதை மிடறினில் அமுதாக திடமுற குடித்திடு மறையோனே படபட துடியொலி தனைபேணி வடிவுறு நடமிடு தழலோனே கொடியவர் நெடுமதில் அவைமூன்றும் பொடியென கெடமுறு வலித்தோனே அடவியின் கடகரி உரித்தோனே விடையமர் கொடைவள பிறவானே சுடுவிழி மடமதன் எரித்தோனே நெடுபுனல் சடையினில் வரித்தோனே வடவரை உடையவ எனபோதும் சுடலையில் குடியுள பெருமானே முடிமதி சுடரொளி தனைவீச கடிமலர் அடியினை அருளாயே             பா வகை: பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Pic courtesy: Link

பீஷ்மாஷ்டமி

Image

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

Image
சமீபத்தில்  அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)

ஸ்ரீஜெயந்தி

Image
இந்திரன் ஆயரைச் சீறியே மாமழை சிந்தினான் ஆங்கவர் அஞ்சவே மாமலை தன்திரு பூவிரல் ஒன்றிலே தாங்கினான் அந்தியின் மேனியான் ஆநிரைக் காவலான் சிந்தையுள் சிக்கிடா சுந்தரன் செய்ததில் விந்தையென்? பாற்கடல் தேவரும் தீயரும் முந்தைசி லுப்பவே உற்றதோர் மத்தென மந்தர மாமலை தன்னையே தாங்கிட வந்தவன் தானிவன் அம்மலை போல்பல அந்தமில் மாமலை சூழ்புவி அன்னையைத் தந்திரப் பொன்விழி யான்கொள ஏனமாய் தந்தமிட் டேந்தியே  மீட்டவன் தாமரை உந்தியின் தோன்றிய நான்முகன் தோற்றிய அந்தரம் யாவையும் தோளினில் ஏந்துமுன் தந்தைசொல் பற்றியே வீசிய தாபதன் எந்தைக்கு அரிதே இல

மாயனும் மன்னனும்

பஞ்சகிருஷ்ணஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தைப் பற்றி பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் ( மன்னுபுகழ் கௌசலைதன் ) மிகப் பிரசித்தமானவை. பொதுவாக ஆழ்வார்கள் எத்தலத்தைப் பாடுகிறார்களோ, அங்கு பெருமாள் கொண்ட ரூபத்தைப் பாடுவர்.  எ.டு:  நின்றதது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து..  என்று நின்றகோலத்தில் திரூஊரகத்திலும், இருந்தகோலத்தில் திருப்பாடகத்திலும், கிடந்தகோலத்தில் திருவெஃகாவிலும் பாடுகிறார் திருமழிசையார். அவ்வாறு இல்லாமல் பொதுவாக பிற கோலங்களை, அவதார ரூபங்களையும், லீலைகளையும் பாடுவதும் உண்டு. ஆனால் ஒரு கிருஷ்ணத்தலத்தை எடுத்துக்கொண்டு  பத்து பாடல்கள் ராமனைப் பற்றி மட்டுமே பாடியது வினோதமானது. தீவிர ராம பக்தரான துளசிதாசர் கிருஷ்ணர் கோவிலில் சென்று இவ்வாறு பாடினாராம்  kaahai varanau chavi aap ki bhalE virAjat nAth Tulsi mastak tab naval dhanush baaN lEvu hAth Dear Lord, I have no words to describe your beauty, but though you have assumed the form of Sri Krishna (Nath), Tulsidas will only pray to you when you have a bo...

எண்ணிலாத முன்னெலாம்

முன்பு இருந்ததோர் காரணத்தாலே மூடரே, பொய்யை மெய் எனலாமோ? முன்பு எனச்சொலும் காலம் அதற்கு மூடரே, ஓர் வரையறை உண்டோ? முன்பு எனச்சொலின் நேற்றும்  முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே; முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு முத்திக் குருநபி       எனவோதி மத்திட்டுவ லித்துச் சிறுபுலி கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட மத்திட்டுடை பட்டுப்  புடைபெயர் தயிரேபோல் மக்கட்குறு  துக்கப் படலையொ துக்கித்திகழ் சொற்கத்    தையுமுரி மைக்கத்தொடு கற்பித் தருள்வது வொருநாளே

வண்டு பாயும் திட வேலவன் தென்மலை

பூங்குழல் மொய்க்கும். அது தெரியும். என்னதான் மிகைக்கூறல் அழகை படித்து ரசிக்க முடிந்தாலும், தலைவி தலையை வண்டு மொய்ப்பதை நினைக்க கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும். அந்தத் திகிலை படம்பிடித்த கவித் தருணங்களும் இருக்கலாம்,  என்று எண்ணிக் கடந்ததுண்டு. இன்று தட்டுப்பட்டது: வண்டை தலைவி தலைவி பூங்குழல் மீது ஏவி விட்டால் பாயுமன்றோ? ஆ! ஈதென்ன விபரீத சண்டைக் காட்சி? ஏவுவது யார்? மற்றொரு தலைவி, யார் சொன்னால் காட்டு வண்டு கூட கேட்குமோ, அவள்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.

கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்  ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்  செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்  எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார் தாவீது, கோலியாற்றை ஒரே கல்லில் வீழ்த்திய காட்சி - வீரமாமுனிவர், தேம்பாவணி

இரு நிலாக்கவிதைகள்

பசி-கிள்ளி அழுகிற பசுங்கிளி குழந்தையின் அழுகையை அமர்த்து அமர்த்த - டம்ளரில் மணியடி, தாலாட்டு பாடு, தோத்தோ கூப்பிடு, பூனைக்கு பூச்சாண்டிக்கு பின்னணி குரல் கொடு கழுதை  என்னமும் செய். எனக்கொன்றும் இல்லை ஆனால் ரேழிக்கு வந்து நிலாக் காட்டாதே. காட்டினால் எட்டு நாளைக்கு முன் தட்டில் பூத்த இட்டிலி ஞாபகம்  அதற்கு வரும். எல்லோரும் ஏறினால் அப்புறம் அழுகைப் பல்லக்கை யார் சுமப்பார்கள்? - கல்யாண்ஜி கவிதை: அழுகைப் பல்லக்கு தொகுப்பு: புலரி உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்     ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை     நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  - பாரதிதாசன் புரட்சிக்கவி

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்...