Posts

Showing posts with the label Culture

Axioms and Proofs

 The Buddhist literature shows that the Devas were a community of human beings. There are so many Devas who come to the Buddha to have their doubts and difficulties removed. How could this have been possible unless the Devas were human beings.                  - B.R. Ambedkar, Revolution and Counter-Revolution in Ancient India

Whence

" பரிபூரண சுத்த சுயம்புவாம் எம் ஹிந்துமதம் " என்று பிதற்றும் முரட்டு பிரஹஸ்பதிகளுக்கும் " எம்மை கபளீகரஞ் செய்ததழித்த சழக்கர்காள்.. " என்று அலறும் முயங்கியல் அறியாத முழுமூடர்களுக்கும் நடுவில் சிக்கி உழலும் சுடர்மிகு  அறிவுடை சோதரரே; எம் ஐ  Gilbert Keith Chestretonஐ படிமின். அவர்தம் தெளிவை ருசிமின்.

Sympathetic Skepticism

Image
In his first chapter of his book on St.Francis of Assisi, G.K.Chesterton starts with a bang. He astutely articulates his position and what he expects of his potential reader this man was a man and not half a dozen men. What seems inconsistency to you did not seem inconsistency to him. Let us see whether we can understand, with the help of the existing understanding, these other things that seem now to be doubly dark, by their intrinsic gloom and their ironic contrast. "I do not mean, of course, that I can really reach such a psychological completeness in this crude and curt outline. But I mean that this is the only controversial condition that I shall here assume; that I am dealing with the sympathetic outsider. I shall not assume any more or any less agreement than this. A materialist may not care whether the inconsistencies are reconciled or not. A Catholic may not see any inconsistencies to reconcile. But I am here addressing the ordinary modern man, sympathetic but scepti...

ஸ்ரீஜெயந்தி

Image
இந்திரன் ஆயரைச் சீறியே மாமழை சிந்தினான் ஆங்கவர் அஞ்சவே மாமலை தன்திரு பூவிரல் ஒன்றிலே தாங்கினான் அந்தியின் மேனியான் ஆநிரைக் காவலான் சிந்தையுள் சிக்கிடா சுந்தரன் செய்ததில் விந்தையென்? பாற்கடல் தேவரும் தீயரும் முந்தைசி லுப்பவே உற்றதோர் மத்தென மந்தர மாமலை தன்னையே தாங்கிட வந்தவன் தானிவன் அம்மலை போல்பல அந்தமில் மாமலை சூழ்புவி அன்னையைத் தந்திரப் பொன்விழி யான்கொள ஏனமாய் தந்தமிட் டேந்தியே  மீட்டவன் தாமரை உந்தியின் தோன்றிய நான்முகன் தோற்றிய அந்தரம் யாவையும் தோளினில் ஏந்துமுன் தந்தைசொல் பற்றியே வீசிய தாபதன் எந்தைக்கு அரிதே இல

மராமரம்

Image
தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,      தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று      உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த      பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து      கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the e...

கீசக வதம்

Image
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம். மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட, சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட, தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ! - வில்லிப்புத்தூரார்

அவுங்க வீட்டு ராமாயணம்

Image
ஆனந்த் ராகவ் எழுதிய ' ராமகியன் ' புத்தகத்தை நேற்று படித்தேன். நன்றாக எழுதப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பிய புத்தகம்.தமிழ்சினிமா விமரிசன பாரம்பரியத்தைப் பின்பற்றி உள்ளடகத்தில் பிடித்துப்போனவற்றை மட்டும் இங்கே சொல்லிவிட்டு, முத்தாய்த்து வைக்கப்போகிறேன்.நிஜ விமர்சனம் வலையுலகில் வேறு யாராவது எழுதாமலா விட்டிருப்பார்கள்.? தென்கிழக்காசியாவில் ராமாயணக்கதை பரவியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் தாய்லாந்தில் ராமகியன் (Ramkien) என்ற பெயரில் நிகழ்த்துகலையாக வழங்கப்படுவதைப் பற்றிப் பிரதானமாகவும், பிற ராமாயணங்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்

சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும்போது இலக்கியம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறது அல்லவா. எனக்கும் அப்படியே. அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும். வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம். .. - சுஜாதா - இலக்கியச் சிந்தனை '75 சிறுகதைத் தொகுப்பு முன்னுரை. இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு மாதமும், அம்மாதம் பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வருடமும் அப்பன்னிரெண்டு கதைகளில் ஒன்றை தேர்வு செய்து பரிசளித்து, பன்னிரெண்டு கதைகளைச் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. தேர்வு செய்பவர் தன் தேர்வை விளக்கி முன்னுரை எழுதுவது வழக்கம். ‘75ல் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர் சுஜாதா. (அவர் தேர்வு செய்தது வண்ணதாசனின் தனுமை). அந்த முன்னுரையின் தெளிவும், சரளமும் அவரில்லாத வெறுமையை இன்னும் அடிக்கோடிடுகின்றன. சில பகுதிகள்: நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்து...

சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு

Image
Author's note: One of the purposes of having a blog is to ensure this writers' works are not lost and is passed on safely to posteriority. The following piece was written sometime earlier in the context of RamSene's mild expression of displeasure against pubbing. As it is that time of the year again for cultural preservatives to get active - the writer assures himself of relevance. சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு கடந்த ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில், மும்பை விலெபார்லெ மெக்டொனால்ட் சிற்றுண்டி வளாகத்தில் கைத்தடிகளுடன் கூடிய ஒரு பத்திருபது நபர் குழு தடியடி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பெண்கள் உள்பட அங்கிருந்த பல வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் காயப்பட்டனார். சாதாரணமாக குண்டுவெடிப்புகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மும்பை நகரவாசிகள் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இது நிகழ்ந்தேரியது. லக்ஷ்மண் சேனா இச்சம்பவத்துக்கு முழுப்பொறுப்பேற்றுள்ளது லக்ஷ்மண் சேனா என்ற அமைப்பு."ராமபிரானைக் காப்பதற்கே அனந்தனின் அவதாரமாகத் தோன்றிய லக்ஷ்மணர் தோன்றினார். அதுப...

Contemporary Culture

Our Sumo stops at petrol bunk on the Tirunelvely-Papanasam road. The local driver mentions it as the location of the cellphone-comedy scene starring Vadivelu, from the movie Vel. I recall it : a pretty bland scene - to be polite- from an ordinary movie - to be politer. I was the youngest is the chock-full Sumo which contained, besides others, an octagenarian former civil servant, a retired professor of English literature and a literary critic. Every single one of them was able to recall the quoted scene without trouble ------------------- From the opening scene of Manhattan: Isaac Davis (voice-over): To him, it was a metaphor for the decay of contemporary culture