Posts

Showing posts from April, 2022

ஶிவஸ்துதி

Image
இக்ஷுஹ்தனு மோஹஷர மத்ஸ்யத்வஜ தஹன தக்ஷஶிர நாஶவிர பத்ரபய ஹரண பக்ஷிகுல ராஜபதி நித்யமன ஶயன வ்ருக்ஷகுரு வேதஃபல நிஶ்சலன  நடன வகை: கலிவிருத்தம் சந்தம்: தானனன தானனன தானனன தனன பொருள் கரும்புவில்லும்  காமபாணமும்  மீன்கொடியும்  கொண்டவனை எரித்தோனே தக்கனது தலையை   அறுத்த வீர* பத்ர(உருவானவனே)   அச்சம் களைபவனே பறவை அரசனான   கருடனின் தலைவனான  திருமாலின் மனதில்   நீங்காது உறைபவனே ஆலமரத்தடி குருவே (தக்ஷிணாமூர்த்தி)   வேதப்பயனே தன் அகத்தே அசைவில்லாது   (ஊழிக்கூத்து) ஆடுபவனே * வீர --> விர (குறைத்தல் விகாரம்) அலகிடல் இக்/ ஷுத/னு           மோ/ஹஷ/ர           மத்ஸ்/ யத்/ வஜ          தஹ/ன தக்/ஷஶி/ர                      நா/ஶவி/ர                பத்/ரப/ய                      ஹர/ன பக்/ஷிகு/கல                     ரா/ஜப/தி                 நித்/யம/ன                 ஶய/ன வ்ருக்/ஷகு/ரு                 வே/தஃப/ல            நிஶ்/சல/ன              நட/ன வாய்ப்பாடு:  கூவிளங்காய்  கூவிளங்காய்  கூவிளங்காய் புளிமா அடிக்கு 15 எழுத்துக்கள் (ஒற்று நீக்கி)  (ஓரளவு) தனித்தமிழில் கன்னற்சிலை ஐம்பூங்கணை வாளைக்கொடி கண்தீப்பட வெரித்தோ

39

Lines On Facing Forty                                  by Ogden Nash I have a bone to pick with Fate. Come here and tell me, girlie, Do you think my mind is maturing late, Or simply rotted early? 37 ,  36 ,  34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

திருவல்லிக்கேணி

  எழுசீர் விருத்தம் சந்தம் : தனாதன தனாதன தனாதன தனாதன    தனாதன தனாதனத் ...... தனதான   திருவல்லிக்கேணி   கராகது வயானையி நிராதர வுதீரசு  டராழியெ றிதூயவன்  புவிமீட்ட வராகன துமாற்றல னிமூத்தன துகூற்றைக  விராசனி வனாற்றல தனைக்காண                   மராமர மொரேழுபு குவாளிவி டுராமனொ  டுபார்த்தன துசாரதி யயுமாதி     அராவணை யிலாணழ கநீள்வடி வுமேவுப  தியேதவ னிமீதினில் இதுபோல      பதம் பிரித்து   கரா கதுவ யானையின் நிராதரவு தீர   சுடராழி எறி தூயவன்      புவிமீட்ட வராகனது மாற்றலனின் மூத்தனது கூற்றை   கவிராஜன் இவன் ஆற்றல் அதனைக்காண மராமரம் ஒரு ஏழு புகு வாளி விடு ராமனொடு   பார்த்தனது சாரதியையும் ஆதி அராவணையில் ஆணழகன் நீள் வடிவு   மேவுபதி ஏது அவனிமீதினில் இது போல     கஜேந்திர வரதர்    நரஸிம்ஹர்   ஶ்ரீராமர்   பார்த்தஸாரதி   ரங்கநாதர் விளக்கம் கரா கதுவ யானையின் நிராதரவு  தீர   சுடராழி எறி தூயவன்   கரா: முதலை முதலை (காலைக்) கவ்வ (துயருற்ற) யானையின் ஆதரவற்ற நிலை தீரும் வகை சுடரொளி வீசிய தூயவனான வரதனை   புவிமீட்ட வராகனது மாற்றலனின் மூத்தனது கூற்றை பூமாதேவியை மீட்டெடுத்த வராஹனது எதிரியான ஹிரண்யாக்ஷனின் மூத்த ஸஹோத