எண்ணிலாத முன்னெலாம்
முன்பு இருந்ததோர் காரணத்தாலே
மூடரே, பொய்யை மெய் எனலாமோ?
முன்பு எனச்சொலும் காலம் அதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ?
முன்பு எனச்சொலின் நேற்றும் முன்பேயாம்
மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல்
மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?
நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?
பார் பிறந்தது தொட்டு இன்று மட்டும்,
பலபலப்பல பற்பல கோடி
கார்பிறக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்கள் அனைவர் உள்ளேயும்,
நீர் பிறப்பதன் முன்பு, மடமை,
நீசத் தன்மை இருந்தனவன்றோ?
மூடரே, பொய்யை மெய் எனலாமோ?
முன்பு எனச்சொலும் காலம் அதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ?
முன்பு எனச்சொலின் நேற்றும் முன்பேயாம்
மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல்
மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?
நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?
பார் பிறந்தது தொட்டு இன்று மட்டும்,
பலபலப்பல பற்பல கோடி
கார்பிறக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்கள் அனைவர் உள்ளேயும்,
நீர் பிறப்பதன் முன்பு, மடமை,
நீசத் தன்மை இருந்தனவன்றோ?
Comments
Post a Comment