மிகவோர் காலம் இனியில்லை


மத்தேயு 8
21
யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.
22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
திருவாசகம் - யாத்திரைப்பத்துநிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. ⁠

Comments

 1. //மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்//

  எவ்வளவு மகத்தான உண்மை! இயேசு கிறிஸ்துவின் வாழ்விலே அடியேனை கவர்ந்ததே இவ்வுலகில் அவர் வாழ்க்கையில் அவரின் பேசும் பாணி ! மிகவும் சுருக்கமாக, எளிதில் புரியும் படி।

  வார்த்தைக்கு நன்றி।

  ReplyDelete
  Replies
  1. சொல்லப்போனால் எனக்கு அத்தனை 'எளிதில் புரியவில்லை'. மலைப்பிரசங்கம் உன்னதமாக, நெகிழ்ச்சியாக ஆனால் நேரடியாக இருக்கும், அதன் பின் வரும் பகுதியில் செய்திகளும், உரையாடல்களும் புரிந்துகொள்ளத்தக்கவை. ஆனால் இவ்வரி கொஞ்சம் பூடகமாகவே இருந்தது எனக்கு.

   சமீபத்தில் கேட்ட ஒரு போதரின் உரை இதை தெளிவுபடுத்தியது:
   சீடர் என்ன கேட்கிறார்? இயேசு என்ன சொல்கிறார்?
   இறந்துவிட்ட தந்தைக்கு கிரியை செய்யாமல் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறானா சீடன்?
   இல்லை, அப்படி இருந்தால் அவன் அங்கி கிரியைகளில் இருந்திருப்பான். பிரசங்கம் கேட்கும் இடத்தில் இருக்கமாட்டான். அவன் சொல்வது: மறுகரைக்கு இப்போது நான் வரவில்லை. என் தந்தை இறந்ததும், அவர் கிரியைகளை முடித்துவிட்டு (அதன்பொருட்டு அடையவேண்டிய லௌகீக அனுகூலங்களைப் பெற்றுவிட்டு) பின்னர் உங்களிடத்து வருகிறேன், என்கிறான்.

   இயேசு: காலம் தாழ்த்தாதே....உதறவிட்டு முன் செல்ல வேண்டிய தருணம் இது. மனம் லௌகீகக் காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும். உன் பழைய வாழ்க்கையில் உன்னை நிறுத்த வழிவகைகளை தோற்றிக்கொண்டே இருக்கும். நீ இல்லாமலும் அக்காரியங்கள் நிறைவேறும். உன் ஆன்மாவைக் கடைத்தேற்றும் வழியை, இவ்வளவு நெருங்கி வந்துவிட்டு கைவிடாதே. அது உனைக்கு பின்னர் கிடைக்காமலே போய்விடலாம்.

   ஒரே வரியில் எத்தனை ஆழமான நுண்பொருள்!

   அதைப் படித்தவுடம் மேற்சொன்ன திருவாசகப்பாடல் நினைவுக்கு வந்தது. இந்த வாய்ப்பை விட்டுவிட்டு பின்பு யோசித்து முயன்றால், பெருமான் கிடைப்பதற்கு அரியவனாகப் போய்விடக்கூடும்:

   பிற்பால் நின்று பேழ் கணித்தால் பெறுநற்கு அரியன் பெருமானே

   Delete

Post a Comment

Popular posts from this blog

Why should I talk?

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director