ராமாவதாரம்
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
(பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்)
நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) |
அப்போது அந்த வேள்வித் தீயிலிருந்து
தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக
அழகிய ஒரு பொன் தட்டத்தின் மேலே
தூய்மையான அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை
தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது
புள்ளமங்கை போலவே, அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது.
வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!), எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?)..
இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க:
இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்டிருக்கிறது. வால்மீகியில் அவ்வாறு இல்லை.
வால்மிகி: பால காண்டம் 16 சர்க்கம்: 15 சுலோகம்
During the sacrifice, there emerged from the sacrificial fire a mighty being with unmatched splendour, his prowess and strength. He wore a black and crimson garment. He had a red face. His voice was similar to the sounds of a drum. He had whiskers of soft and shining tawny hair resembling the mane of a lion He had fine hair on his head. He was endowed with auspicious signs and adorned with splendid divine ornaments. His height resembled a mountain peak. He walked with the strides of a ferocious tiger. Similar to the Sun in radiance, he looked like the crest of a blazing fire. This divine being held like his beloved wife both hands, a large vessel made of gold purified, in fire, covered with a silver lid and filled with payasam (a preparation of rice in milk and sugar). It looked as though it was created by magic.
வான்மீக மூலக்கதை தமிகழத்தில் பல தலமுறைகளாக வழங்கப்பட்டு, முக்கிய கணங்களுக்கு ஒரு துல்லியமான காட்சிப்படுத்துதல்கள் (visual specificity), வளர்ந்து (அதாவது கதைசொல்லலிலேயே) எழுந்தபின்னர், அவற்றை சிற்பிகளும், புலவர்களும் வடித்தார்கள் என்று இந்த ஒற்றுமைகள் எண்ணத்தோன்றுகிறன.
தொடர்புடைய இடுகை
Comments
Post a Comment