Posts

Showing posts from July, 2019

சித்திர விதிகள்

படிக்கப்படிக்க,  பொருளிலக்கணம் என்பதை the grammar of content என்பதை விட the grammar of (the aesthetics of) depiction என்று பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. (ரெண்டும் ஒண்ணுதானோ?) இவ்வாறு நோக்கினால், கறாரான விதிகளால் கட்டப்பட்ட சமூகச் சித்திரம் எழுவதாக உறுதியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவ்விதிகள் ' இப்படிப்பட்ட சித்தரிப்பே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் ' என்று  வழிகாட்டுவதாகப் பொருள்கொள்ளலாம். ஒரு சித்திரத்தின் நம்பகத்தன்மை என்பது அச்சமூகத்தின் பெருவழக்குகள் சார்ந்தே எழும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை நெகிழ்வுக்கு இடமிலா விதிகள் அல்ல - என்றே எண்ணத் தோன்றுகிறது. நம்பியகப்பொருளின் கடைசி பகுதியான ஒழிபியல் - the chapter of exceptions -  மிக சுவாரஸ்யமான பகுதி. அதுவரை நூல்நெடுக எந்த நிலத்தில் என்னென்ன பேசுபொருட்கள், விவரணைப் பொருட்கள், காதல்-மணம்-இல்வாழ்க்கை என்று ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு கவித்தருணங்கள் வடிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு அவற்றிற்கு விதிவிலக்குகள் சொல்லப்படுகின்றன.