Posts

Showing posts with the label Bharathi

உண்கள்வார்

மரணத்தருவாயில் வாலி ராமனிடம் ஒன்று கேட்கிறான்: ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால் பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு:  பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன்,  பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது  தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.

காவிat Emptor

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை  தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;  மீத்திடும் பொழுதினி லே - நான்  வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே  கோத்தபொய் வேதங்களும் - மதக்  கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்  மூத்தவர் பொய்ந்நடை யும் - இள  மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்                     - கண்ணன் என் தாய்

எண்ணிலாத முன்னெலாம்

முன்பு இருந்ததோர் காரணத்தாலே மூடரே, பொய்யை மெய் எனலாமோ? முன்பு எனச்சொலும் காலம் அதற்கு மூடரே, ஓர் வரையறை உண்டோ? முன்பு எனச்சொலின் நேற்றும்  முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே; முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?

காதலும் விடுதலையும்

காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில் ; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் ; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்து விட்டால் வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.

எமக்குத் தொழில்

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ? மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ? - பாரதி அறுபத்தியாறு (53) வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. - குறள் (1268)

arundhavappanRi

Just Finished Reading Bharathi Krishnakumar 's arunthavappanRi (அருந்தவப்பன்றி). A very interesting book about a phase in Bharathi's life which has not been talked about much - either by his biographers or by himself. A phase of about six years - teens to early twenties and later a four month period- when he says poetry abandoned him.

One Situation - Two Poets

Kamban's RavaNan castigating VibeeshaNan and Bharathi's Duryodhanan castigating Vidhuran.

Make Love Not Work

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றோ? யான் எதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் என் மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா; ஊன் உடலை வருத்தாதீர்; உணவு இயற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்! Happy Birthday!

Mike Testing

I dig this

Regarding translation, AKRamanujan mentions a lovely story about how a Chinese emperor tried digging a tunnel. A minister suggested digging from both sides and the emperor asked him what is the digging didn't meet. "Then we will have two tunnels instead of one" came the reply. Enamoured by the analogy this writer takes his pick-ax and gets to work. Those who know the Tamil original, the tunnel story is for you. And those who don't, well it atleast rhymes, doesn't it ? A bright little spark of fire I found And tucked it away in a burrow in the woods All the forest was razed to the ground Does the rage of fire know its shouldn'ts and shoulds