Posts

Showing posts from July, 2013

முன்கதை சுருக்கம்

6961 தொடர்கதையில் இரண்டாவது பகுதிக்கு முன் எழுதியது: முன்கதை சுருக்கம்: முன்கதை சுருக்கம் என்பது கொடுமை. உயிரை விட்டு எழுதிய வாக்கியங்களை ஒருவரியில் சுருக்கி 'விமலா பார்க்கில் ராஜேஷை (ராஜேஷா ராகேஷா?) சந்தித்து அவர்கள் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டு மனம் மாறுகிறாள்' என்று எழுதினால் சென்ற அத்தியாத்துக்கு, அதன் விஸ்தாரத்துக்கு அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. ஆகவே, என் அவசரம் மிகுந்த வாசகியே, முன்கதை சுருக்கம் கிடையாது சுஜாதா - கணையாழி, செப் 1969

ஒரு கவிதை

தி.வ.மெய்கண்டார் ஆசிரியராக இருக்கும் கவிதாமண்டலம்  சனவரி 2013 இதழிலிருந்து ஒரு கவிதை ரெண்டு திராபை stanza’க்கள் தாங்கினால் ஒரு கவிக்கணம் லாபம். உவமைக் கவிஞர் சுரதாவின் ஒப்பிலா நூல் வேட்கை - கவிவேந்தர் கா.வேழவேந்தன் ’உவமைகளே இல்லாத கவிதை யெல்லாம்  உப்பில்லாப் பண்டம்தான்’ என்றே கூறி சுவைக்கவிதை வடிவித்தவர்தான் சுரதா! அன்னார்  சொற்பொழிவோ தகவல்களின் சுரங்கப் பேழை! எவைஎவற்றை எந்நாளில் எவர்ப டைத்தார்  எனும்விவரம் சொல்வதிலே கணினி ஆவார் இவர்இந்தப் பேராற்றல் பெற்றார் என்றால்  ஏடுகளைத் தேடிநிதம் படித்த தால்தான்