Posts

Showing posts from February, 2020

Whence

" பரிபூரண சுத்த சுயம்புவாம் எம் ஹிந்துமதம் " என்று பிதற்றும் முரட்டு பிரஹஸ்பதிகளுக்கும் " எம்மை கபளீகரஞ் செய்ததழித்த சழக்கர்காள்.. " என்று அலறும் முயங்கியல் அறியாத முழுமூடர்களுக்கும் நடுவில் சிக்கி உழலும் சுடர்மிகு  அறிவுடை சோதரரே; எம் ஐ  Gilbert Keith Chestretonஐ படிமின். அவர்தம் தெளிவை ருசிமின்.

திருபுராந்தகன்

இம்முறை சிவராத்திரிக்கு, திருபுராந்தக புராணம் பற்றி ஒரு சின்னஞ்சிறு பாடல்: அரக்கர் மூவரின் அயில்தாக்கிட புரந்தரன் தலை பல தேவரும்                              வருந்த ஈசனும் செறுஏகினான் வருந்த ஈசனும் செறுஏகினான் பரந்த வையகம் ரதமாகிட பரிதி சந்திரன் உருளாகிட                               அரிய நான்மறை பரியாகிட பிரம சாரதி வழிகாட்டினான் கிரிவ ளைந்தொரு சிலையாகிட பெரிய வாசுகி சிலைநாணிட                                         கரிய மாலவன் கணையாகிட சுரர னைவரும் தமராலுரு பெருமை எண்ணிட நுதல்நேத்திரன் முறுவலித்திட எரிதாக்கிட                                திருபு ரங்களும் பழுதாகிட விரிச டையொடு நடமாடினான் பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் Last year's post:  http://dagalti.blogspot.com/2019/03/blog-post.html

Sympathetic Skepticism

Image
In his first chapter of his book on St.Francis of Assisi, G.K.Chesterton starts with a bang. He astutely articulates his position and what he expects of his potential reader this man was a man and not half a dozen men. What seems inconsistency to you did not seem inconsistency to him. Let us see whether we can understand, with the help of the existing understanding, these other things that seem now to be doubly dark, by their intrinsic gloom and their ironic contrast. "I do not mean, of course, that I can really reach such a psychological completeness in this crude and curt outline. But I mean that this is the only controversial condition that I shall here assume; that I am dealing with the sympathetic outsider. I shall not assume any more or any less agreement than this. A materialist may not care whether the inconsistencies are reconciled or not. A Catholic may not see any inconsistencies to reconcile. But I am here addressing the ordinary modern man, sympathetic but scepti

திராவிடப் பிதாமஹர்

சிந்தாமணியைப் பதிப்பிக்கும் பொருட்டு உ.வே.சா சென்னை வருகிறார். அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு சக்கிரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (இவர் வேறு) வந்து, அவர் நன்கு ஆய்ந்து உரை எழுதி இருப்பதை பாராட்டுகிறார் “எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அதன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன். - என் சரித்திரம், அத்தியாயம் 95