Posts

Showing posts with the label Religion

தமிழிலக்கியமும் தைப்பொங்கலும்

Image
 தைப்பொங்கல் ஒரு உழவர் பண்டிகை என்பது இன்று காணும் நிதர்சனம் என்றாலும், அது எக்காலத்தில் இந்நிலையை அடைந்தது என்பதில் தெளிவில்லை. ‘சங்க காலம் முதற்கொண்டே இயற்கைக்கும், மாடுகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவைக் கொண்டாடி வருவது தெளிவு’ என்கிற ரீதியில் ஒரு பொதுப்புரிதல் நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த இலக்கிய சான்றும் இல்லை. பொதுவாக சங்ககாலம் தொட்டு தைப்பொங்கல் தமிழர் பண்டாட்டில் நிலவுவதாக நம்ப விழைபவர்கள் காட்டும் சில மேற்கோள்களைப் பார்ப்போம் (பலர் இவ்வரிகளை புளகாங்கித வாட்ஸாப் இடுகைகளில் பார்த்திருக்கலாம்!) 1. அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த  ஆய் கரும்பின் கொடிக்கூரை  சாறு கொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற (புறநானூறு 22) சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் போர்ப்பாசறையைப் பாடும் பாடலில் வரும் வரி இது.  இவ்வரியின் பொருள்: உ உ “அசைந்த செந்நெல் கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பால் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை, விழா எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் போல வேறு வேறாக பொலிவு தோன்ற.... ” (உ.வே.சா உரை) இப்பாடலின் நிகழ்காலம் பொங்கல் விழா அல்ல, போர்க்களம். செந்நெல், கரும்பு இரண்...

சங்கர விருத்தம்

Image
  Following the principle of, have blog, will archive: மந்தனர் அலங்கல் வாட மறைகளை அளவை என்னா அந்தகர் வளமை தேய அறுவகை சமயம் மீள சந்திரன் கதிரோன் மாட்சி சரியவே உதித்தார் போல இந்தியத் திருநா டெங்கும் இவர்பதம் பதித்த வாரே தர்க்கவாதத்தில் மந்தன மிஸ்ரரின் மாலை வாடும்படியாக அவரை (யும் அதன் வழி மீமாஸத்தையும்) வென்றார் வேதங்களை ப்ரமாணமாக ஏற்க மறுத்த, தத்துவார்த்த பார்வை குன்றியோரின் (ஶ்ரமணர், பௌத்தர், லோகாயதர் போன்றோர்) ஆளுமையை குன்றச் செய்த்கார் ஷண்மதத்தை மீட்டார் கதிரவன் சாய, ஒளிமங்கி இருள் ஏறும் காலத்தே மதி (கதிரவனின் ஒளி வாங்கி) ஒளிபாய்ச்சி மீட்பது போல இந்தியத் திருநாடெங்கும் (சங்கரர்) கால் தடம் பதித்தார் (மந்தகதி எய்திய வேதகதியை மீட்டார்) 

தெள்ளிய சிங்க தேவு

Image
  இன்று நரஸிம்ஹ ஜெயந்தி. இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை. Dasavatara Cave, Ellora. Shot in 2015. விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம்.  ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே. சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு.   அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை. ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி.  அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன? Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்:    A.K.Ramanujan (wiki)                            assassin  of certitudes, slay now my...

மிகவோர் காலம் இனியில்லை

மத்தேயு 8 21 யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். 22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும் ” என்றார். திருவாசகம் - யாத்திரைப்பத்து நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. ⁠