Monday, July 29, 2019

சித்திர விதிகள்

படிக்கப்படிக்க,  பொருளிலக்கணம் என்பதை the grammar of content என்பதை விட the grammar of (the aesthetics of) depiction என்று பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. (ரெண்டும் ஒண்ணுதானோ?)

இவ்வாறு நோக்கினால், கறாரான விதிகளால் கட்டப்பட்ட சமூகச் சித்திரம் எழுவதாக உறுதியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவ்விதிகள் 'இப்படிப்பட்ட சித்தரிப்பே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்' என்று  வழிகாட்டுவதாகப் பொருள்கொள்ளலாம். ஒரு சித்திரத்தின் நம்பகத்தன்மை என்பது அச்சமூகத்தின் பெருவழக்குகள் சார்ந்தே எழும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை நெகிழ்வுக்கு இடமிலா விதிகள் அல்ல - என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்பியகப்பொருளின் கடைசி பகுதியான ஒழிபியல் - the chapter of exceptions -  மிக சுவாரஸ்யமான பகுதி. அதுவரை நூல்நெடுக எந்த நிலத்தில் என்னென்ன பேசுபொருட்கள், விவரணைப் பொருட்கள், காதல்-மணம்-இல்வாழ்க்கை என்று ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு கவித்தருணங்கள் வடிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு அவற்றிற்கு விதிவிலக்குகள் சொல்லப்படுகின்றன.

Wednesday, June 19, 2019

ராமசேது

சாவி'யின் 'நவகாளி யாத்திரை' (வானதி பதிப்பகம்) நூலிலிருந்து:


குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி தர்மாபூருக்கு செல்வதற்குள் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்கவேண்டி இருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும்  வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்துசெல்ல மூங்கில்களினால் பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களைக் கடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஶ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக்கொண்டும், கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்கு பழக்கம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாஜியிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க அலோசனைகள் கேட்பதற்கு ஶ்ரீராம்பூருக்கு வந்திருந்தனர். காந்திஜி அப்போது மூங்கில்பாலம் மீது நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி இதைப் பார்த்துவிட்டு 'பூ! இவ்வளவு தானா?" என்பதைப் போல சிரித்தார்.

காந்திஜி, ஜவஹரைப் பார்த்து "தாங்கள் நினைக்கிறபடி இந்தப் பாலத்தில் நடப்பது அத்தனை சுலபமல்ல; நடந்து பார்த்தால் தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும்" என்றார்.

உடனே பண்டித நேரு, "இதோ பாருங்கள்" என்று கச்சத்தை வரிந்து கட்டினார். கைச்சட்டை விளிம்புகளை மடக்கி விட்டுக்கொண்டார். சற்றுப் பின்னால் சென்று வேகமாக ஓடி வந்து சட்டெனப் பாய்ந்து அந்த வாய்க்காலை ஒரே தாண்டாக தாண்டிக் காட்டினார்.இதைப்பார்த்த மகாத்மாஜி மூக்கின்மேல் விரலை வைத்து, 'ஹரேரே!' என்று ஆச்சரியப்பட்டுப் போனார்! நேருஜியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, "இதுபோல் ஒவ்வொரு வாய்க்காலையும் கடப்பதற்கு நான் பின்னுக்குப் போய்  ஓடி வந்து தாண்டிக் கொண்டிருக்க முடியாதே!" என்றார். நேருஜியும், மற்றவர்களும் அதைக்கேட்டு சிரித்து விட்டனர்.

'நவகாளி என்னும் இலங்கைத் தீவிலே சமரஸம் எனும் சீதையை அடைவதற்காக ராமன் அணை கட்டியது போல் காந்திஜியும் மூங்கில் பாலம் அமைத்து கடந்து செல்கிறார். ஜவஹரோ அந்தப் பாலத்தை ஹனுமானைப் போல் ஒரே தாவாகத் தாவி விட்டார். ரொம்பவும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.


'ஈஸ்வர் அல்லா தேரோ நாம்' என்ற வரியை 'ராம்துன்' பஜனையில் இணைத்து ராமருக்கு இணைவைத்துவிட்டார் என்று சில பிரஹஸ்பதிகள் புதிதாகக் கண்டுபிடித்துப் பொங்கியிருக்கிறார்கள்.  அவ்வரி நவகாளி யாத்திரையின்போது சேர்க்கப்பட்டது என்பது அவர்களுக்கு ஒரு factoid மட்டுமே என்றால்,  சொல்வதற்கு ஒன்றுமில்லை. 'வாழ்க பாரதம்'
Monday, June 10, 2019

காவிat Emptor

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை 
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்; 
மீத்திடும் பொழுதினி லே - நான் 
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே 
கோத்தபொய் வேதங்களும் - மதக் 
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும் 
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள 
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்


                    - கண்ணன் என் தாய்

Tuesday, May 28, 2019

மீட்சி


 உங்கள் குடும்பமுன்னோர்கள் பற்றி ஸ்வாரஸ்யமாக எதாவது சொல்லுங்கள் என்றொரு கீச்சிழை. கதை சொல்வார்கள் என்று பார்த்தால்எல்லாரும் கர்மஶ்ரத்தையாக அபிவாதயே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐயகோ! 

எப்படிச் செய்யவேண்டும் என்று காட்ட இவ்விடுகை.

Friday, April 19, 2019

36


புதியன புகுவதால் பழையன கழிந்து போகும் என்று பயப்படவேண்டியதில்லை.  பழைய பொருளின் பெருமை அதன் பண்பில் நிலை பெற்றிருக்கிறது. போட்டி இல்லாமலே அதைக் காப்பாற்றும் அவசியம் இல்லை. சங்கீதத்திலாவது இலக்கியத்திலாவது நாணயச் செலவாணியில் சொல்லப்படும் ’க்ரெஷாம்ஸ் லா’ கிடையாது

 - தமிழும் இசையும், ராஜாஜி கட்டுரைகள்

One is undeniably old, when one feels that The wise old man's opinion was juvenile optimism - if not outright dereliction of vanguard duties.

PS:   இவ்விடுகை இசை/இலக்கியம் பற்றியது அன்று
34, 32313029282726

Monday, March 18, 2019

கல் தோன்றிய காலம்


அகலிகை எப்போது கல்லானாள்?

புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம்
பரிபாடல் 19ல்  திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது

50-52 வரிகள்:

... இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும்

கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள்.

பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும்.

சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே?
ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

Monday, March 4, 2019

சிவராத்திரிதுடியிடை மடமகள் சரிபாதி
உடலினில் இடந்தரு பதியோனே
விடமதை மிடறினில் அமுதாக
திடமுற குடித்திடு மறையோனே

படபட துடியொலி தனைபேணி
வடிவுறு நடமிடு தழலோனே
கொடியவர் நெடுமதில் அவைமூன்றும்
பொடியென கெடமுறு வலித்தோனே

அடவியின் கடகரி உரித்தோனே
விடையமர் கொடைவள பிறவானே
சுடுவிழி மடமதன் எரித்தோனே
நெடுபுனல் சடையினில் வரித்தோனே

வடவரை உடையவ எனபோதும்
சுடலையில் குடியுள பெருமானே
முடிமதி சுடரொளி தனைவீச
கடிமலர் அடியினை அருளாயே           

பா வகை: பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Pic courtesy: Link