Posts

Showing posts with the label செய்யுள்

ந்யாயம்

Image
  கரந்திருந்து ராவகன்  சரந்தொடுத்த தால்கொலோ              புரந்தரந்தன் மைந்தனும்  நிரந்தரத்தி லொன்றினான் வரந்துரப்ப தாதையாற்  சுரந்துணிந்த மைந்தனின்            பரந்தமைந்த வில்லெழு மரந்துளைத்த வண்ணமாய் உரந்தணிந்த வர்ச்சுனன் இரந்துணர்ந்த  கீதையாற்            கரந்திணிந்து கௌரவர் திரந்தொலைந்து போயினார்  உரந்தெளிப்ப தும்பயிர் தரந்திளைப்ப  தும்பணி              சிரந்திணிந்த கீழ்மைகொல் நிரந்தராயெ நாதியே  வகை: எண் சீர் விருத்தம் அடி:  கருவிளங்காய் கூவிளம் என்ற பிணை X 4 பதம் பிரித்து கரந்து இருந்து ராவகன்  சரம் தொடுத்ததால் கொலோ           புரந்தரந்தன் மைந்தனும்  நிரந்தரத்தில் ஒன்றினான் வரம் துரப்ப தாதையால்  சுரம் துணிந்த மைந்தனின்          பரந்து அமைந்த வில் எழு மரம் துளைத்த வண்ணமாய் உரம் தணிந்த அர்ச்சுனன் இரந்து உணர்ந...

Rules and Rulers

Image
 In the original story of Sakuntala, as told in the Mahabhratha, there is no ring. Sakuntala appears in Dushmanta's court with their son and requests Dushmanta to declare him the heir to his throne, as he had promised her, before their gandharva vivāham. Though Dushmanta very much remembers their encounter (and thus recognises legitimacy of the claim), he still pretends not to remember and asks her provocative, insulting questions in his court.  But he is ' being cruel only to be kind '. For, this sets the dramatic stage for  a fine articulation of her case by Sakuntala, which ends in the divine voice from the sky, declaring her to be true and for Dushmanta to accept her and their son. And then, Dushmanta tells his courtiers that he always knew but his word would have been insufficient proof to the court. We are of course, more aware of the storyline of KāLidāsa's play abhijñānasākuntalam, where the poet made significant departures. The elevation of the 'word/memory...

காயத்ரீ ஜபம்

Image
முத்துபவழபொன் நீலவெண்ணிறத் தைமுகச் சிறப்பும்                              ரத்தினமகுடம் மீதொளிர்ந்திடு கூன்பிறை வனப்பும் குத்திடங்குசமும் மண்டையோடொடு சங்குசக் கிரமும்  மத்தையொத்தகதை   வார்கசையர விந்தமீ ரிணையும்  பத்தருக்களியும் அச்சநீக்கமும் என்றறு கரமும்  மொத்தமானதொரு தேவிமந்திரம் ஓதிடும் பொறுப்பும் நித்தமெதையுமே செய்திடாதொரு  நாளிலீ டுசெய்யும் பித்தினும்பெரிது காண்பதற்கிலை நகைஇசோ தரியே #காயத்ரீஜபம் #எண்சீர்விருத்தம் #என்னைச்சொன்னேன் pic.twitter.com/dS0b0g0iSB — dagalti (@dagalti) August 2, 2023 வகை: எண் சீர் விருத்தம் சந்தம்: ஒவ்வொரு அரையடியிலும் : கூவிளநறும்பூ கூவிளங்கனி கூவிளம் புளிமா விளக்க்கம் முத்து பவழ பொன் நீல வெண் நிறத்து ஐமுகச் சிறப்பும்  - The greatness of the five faces of the hues Pearl, coral, golden, sapphire blue and white ரத்தின மகுடம் மீது ஒளிர்ந்திடு கூன் பிறை வனப்பும் - the beauty o...

வீடணன் புலம்பல்

தாதைதோ தாதி தாதை தூதீதோ தாதைத்தூ தாதை தூதீ தீதீதோ தூதத்தை தாதீ தீதோ தீதோதா தாதை தித்தித்த தோதாதீ தீதே   வகை: கலிவிருத்தம் ஏக அக்ஷரம்: தகவருக்கப்பாடல்   சந்தி பிரித்து   தாதை தோது ஆதி தாதை தூ தீதோ? தாதைத் தூ தாதை தூது ஈ தீ தீதோ? தூ தத்தை தா தீ தீதோ? “தீது ஓதா தாதை தித்தித்த தோதா தீ தீதே   விளக்கம்   1.     தாதை க்கு தோதா ன ஆதி தாதை யின் தூ தீ ய தோ ? தன் தந்தையாகிய தயரதனுக்கு இசைவாக நடந்துகொண்ட ,  இந்த உலகுக்கே தந்தையான இராமனின் பகை (தூ), தீமையானதா? 2.     தாதைத் தூ வும் தாதை யைக் கொண்ட தூது வன் ஈந்த தீ தீ ய தோ ? பூந்தாதுக்களை பரவச்செய்து உயிர்களை நீட்சிபெறச்செய்யும் வாயுவின் மைந்தனான அனுமன் ,  நமக்கு அளித்த ஆசோகவனத்தீ தீமையானதா? 3.     தூ ய்மையானவளும் ,  தத்தை (கிளி) போன்றவளுமான சீதை, உட்புகத் தா விய தீ தீ ய தோ ? 4.     (இவை யாவை கொடுந்தீ அல்ல ,  மாறாக)    தீது எதையும் ஓதாத * தாதை க்கு (என் தந்தையாக விளங்க்கிய இராவணனுக்கு)  தித்தித்த (இனிதெனக் கொண்ட) தோதா (பொருந்தாத...

கற்பில் இரவுக்குறி இடையீடு

பீடிகை  : தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்  அம்மா அரிவை முயக்கு எனக்கு மிகப்பிடித்த குறள்களில் ஒன்று நமது மெய்யியல் புலத்தில் வழங்கிவரும் த்ரிவர்க்க பகுப்புகளான: தர்மம்-அர்த்தம்-காமம் (முறையே அறம், பொருள், இன்பம்)  ஆகியவை ஒன்றுதிரண்டு வரும் குறள் இது. இப்போது இக்குறளைக் குடலாபரேஷன் செய்வோம்: பருண்மையான பொருட்களை உவமையாக்கி கருத்துகளைப் புலப்படுத்தும் உத்தியை நாம் கவிதைகளில் காணலாம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமை, தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - அறிவு). ஆனால் இங்கு தலைவன் இங்கு விவரிப்பது தலைவியை அணைப்பதை.  அழகிய மாமை நிறத்தாளை, அரிவை பருவத்தாளை அணைத்தல் (பருண்மை) எத்தகையது? ஒருவன் தனக்கு சொந்தமான இல்லத்தில், தனக்கு உரிய உணவை உண்ணும் இன்பத்தைப் போன்றதாம்.  பொருட்செல்வத்தை, அறத்தின் வழி நின்று நுகர்வதைப் போல இவளை அணைத்தல், என்ற வருணனையின் நுட்பத்தை என்னவென்பது. Propriety, moderation என்ற வழக்கொழி நிலையெய்திய கல்யாண குணங்களைத் தன்னுள் குறுகத் தரித்த குறள். சரி இதுக்கென்னப்பா இப்போ? சொந்த ஸாஹித்யத்து க்குப் பீடிகை ஸ்வாமி தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்...

ஒரு தேரில் இரு கிருஷ்ணன்கள்

Image
உத்யோக பர்வத்தில் ஒரு இடம். பார்த்தனுக்கு சாரதியாக இருக்க கிருஷ்ணன் சம்மதித்துவிட்டான் என்ற செய்தி அறிந்த த்ரிதராஷ்ட்ரர் புலம்புகிறார்: ஒரு ரதத்தில் இரு கிருஷ்ணன்களும் (அர்ஜுனனும் கரிய நிறத்தவன் என்பதால் அவனுக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் உண்டு), காண்டீபமும் சேர்ந்துவந்தால் நிகழப்போகும் தாக்குதலை யாராலும் தாங்கமுடியாது என்பது எனக்குக் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இதைக் க்கௌரவர்கள் உணரவில்லையே , என்று அங்கலாய்க்கிறார். காங்குலியின் மொழிபெயர்ப்பில் : We hear that the two Krishnas on the same car and the stringed Gandiva,--these three forces,--have been united together. As regards ourselves, we have not a bow of that kind, or a warrior like Arjuna, or a charioteer like Krishna. The foolish followers of Duryodhana are not aware of this. O Sanjaya, the blazing thunderbolt falling on the head leaveth something undestroyed, but the arrows, O child, shot by Kiritin leave nothing undestroyed. Even now I behold Dhanajaya shooting his arrows and committing a havoc around, picking off heads from bodie...

யாரென்று தெரிகிறதா

Image
  வ்யாஸபாரதத்தில் சிறப்பாக சில இடங்களில் ‘க்கூட ஶ்லோகங்கள் ’  வரும். அதாவது நேராக படித்தால் பொருளற்ற சொற்றொடர் போலவும் ,  பிரித்துப் படித்தால் பொருளுணரும்படியாகவும் அமைக்கப்பெற்ற ஶ்லோகங்கள்.   இவை பிரிமொழி ஶ்லேஷத்திலிருந்து (சிலேடை) வேறுபட்டவை. சிலேடையில் இருவேறு பொருள்கள் வரும். ஆனால் (நான் புரிந்துகொண்டவரை) க்கூட ஶ்லோகத்தில் மறைபொருள் புரியாவிடில் மிஞ்சுவது பொருளற்ற சொற்றொடரே.    இவ்வாறு அமைத்ததற்கு ஒரு அழகான புராண விளக்கம் உண்டு.  வ்யாஸர் சொல்லச்சொல்ல எழுத்திலாக்குவதற்கு ஒப்பிய விநாயகர் வைத்த ஒரே நிபந்தனை: புரியவில்லையென்றாலொழிய எழுத்து வேகம் குறையாது ,  ஆனால் தான் எழுதும்வேகத்துக்கு வ்யாஸர் சொல்லவேண்டும் என்பதே, அது. ( Painting by Sri Keshav ) அதனால் வ்யாஸர், தனக்கு சிந்தித்துத் தொகுத்துக்கொள்ள நேரம்வேண்டி ,  விநாயகவேகத்தை மட்டுப்படுத்த எழுதியவை இந்த கூட ஶ்லோகங்கள் என்பர். அவ்வகை ஶ்லோகங்களில் ஒரு ப்ரபலமானது: நதீ ³ ஜ லங்கேஶவனாரிகேதுர்னகா ³ ஹ்வயோ நாம நகா ³ ரிஸூனு: இது சிறப்புறுவது, கதையில் இது தோன்றும் கணத்தால்: விராட பர்வத்தில் வெட்சிப் ப...

ஆழி

Image
  Archiving a Tweet A conversation between Dhritarāshtra & Krishnā in palindrome அடிகள் சாவா ரைவது நாவாலே மாலே வாணா துவரைவாசா தேவா நோதியோ வறமதோ மறவ யோதி நோவாதே காவார் தீயரை மாயாதோ யாமா ரைய தீர்வாகா ஏவா னோர்யது தீயாழி விழியா தீதுயர் நோவாயே     Dhritar ā shtra  says  he is worried about Draupadi’s  deadly  vow. But he is  actually  worried Krishna’s involvement will make it too ‘unfair’ for his sons.   Krishn ā  assures him he will not use his Sudarshana Chakr ā . 
   But not before he says if those who  fail to  protect ( dharma) , don’t end evil men,  then  evil won’t end and that is no solution. As the  C hakr ā  is concomitant with the imagery  of   D harm ā  itself  - it is  implied  that Krishn ā assures that he can at best keep his Sudarshana Chakra in abeyance, but the Wheel of Dharm ā  will run its course. 
      சாவார் ஐ வது நாவாலே ...