Posts

Showing posts with the label Sculpture

மராமரம்

Image
தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,      தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று      உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த      பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து      கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the e...

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்...

ஹோலி

Image
தன்முன் எதிர்படும் மங்கைக் கிலியுற   வண்ணம் பூசிடும் அயலானே கன்னற் சிலையவன் அங்கம் எரிபட  இந்நாள் நுதல்விழித் தரனாரே ( தாராசுரம் )

கல்லில் உறைந்த கணம்

Image
கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம். பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம். ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை. கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?). ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள். அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.

கீசக வதம்

Image
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம். மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட, சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட, தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ! - வில்லிப்புத்தூரார்