Posts

Showing posts with the label Kamban

Rules and Rulers

Image
 In the original story of Sakuntala, as told in the Mahabhratha, there is no ring. Sakuntala appears in Dushmanta's court with their son and requests Dushmanta to declare him the heir to his throne, as he had promised her, before their gandharva vivāham. Though Dushmanta very much remembers their encounter (and thus recognises legitimacy of the claim), he still pretends not to remember and asks her provocative, insulting questions in his court.  But he is ' being cruel only to be kind '. For, this sets the dramatic stage for  a fine articulation of her case by Sakuntala, which ends in the divine voice from the sky, declaring her to be true and for Dushmanta to accept her and their son. And then, Dushmanta tells his courtiers that he always knew but his word would have been insufficient proof to the court. We are of course, more aware of the storyline of KāLidāsa's play abhijñānasākuntalam, where the poet made significant departures. The elevation of the 'word/memory...

பூளை

Image
போகிப்பொங்கலுக்கு பூளைப்பூங்கொத்தை வாசலில் செருகி வைப்பது ஒரு வழக்கம் பெருங்காற்றிற்கு உதிர்ந்துவிடும் இதழ்கள் உடையை இப்பூ, மதில்காக்கும் உழிஞைவீரர் தலையில் அணிவதாம்.  கம்பனில் இது இரு விசேஷமான பாடல்களில் வருவதைக் காணலாம்.  பிக்‌ஷாடன உருவில் வரும் இராவணன், வேடம் கலைவதற்கு முன் சீதையுடன் ஒரு வாதில் ஈடுபடுகிறான். அரக்கரை உயர்த்திப் பேசும் பிக்‌ஷாடனனிடம், இராமன் விராதனை அழித்ததுபோல் பிற அரக்கரையும் அழிப்பான் என்கிறாள். அதற்கு பிக்‌ஷாடன இராவணன்,   இலங்கேஸ்வரனை உயர்த்திப் பேசுகிறான்: சீறினன், உரைசெய்வான்,' "அச்சிறு  வலிப் புல்லியோர்கட்கு  ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல்  தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை வீறிய பொழுது, பூளைவீ என   வீவன் அன்றோ? பிக்‌ஷாடனன் கோவமாகச் சீறினான். வலிமையற்ற விராதன் போன்றோரை ஒரு மனிதன் கொன்றான் என்று பெரிதாக நீ பேசினால், அதற்கு தெளிவான பதில் நாளையே உனக்கு கிட்டும்;  (இலங்கேஸ்வரனின்) அந்த இருபது தோள்கள் அசைந்து கிளப்பும் காற்றில் சிதறும் பூளைப்பூவாக இராமன் வீழ்வான். (வீ - என்பது பூவின் ...

உண்கள்வார்

மரணத்தருவாயில் வாலி ராமனிடம் ஒன்று கேட்கிறான்: ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால் பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு:  பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன்,  பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது  தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.

கல் தோன்றிய காலம்

Image
அகலிகை எப்போது கல்லானாள்? புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம் பரிபாடல் 19ல்   திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது 50-52 வரிகள்: ... இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும் கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள். பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே? ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

ரூபம்

அலைகடல் கடைய வேண்டின் ஆர் இனிக் கடைவர் ஐயா! - கம்பன் (பொ.யு 13ம் நூற்றாண்டு) இங்குதான் அனைத்துமே போவ தென்ப தெவ்விடம்? - கமல்ஹாசன் (2000)

பேதை

Image
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி  ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்  சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்  பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? Except Sita                    who                             thinks and long for             Rama                     who                            (the very form of righteousness that he is)                             bore his father's Word, upon his head                     whose                     ...

மராமரம்

Image
தூண்சிற்பம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் மராமரமப் படலம் வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,      தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று      உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த      பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து      கீழ் போகிய வேர; பொருள்: (பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை. வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை: கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம் Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the e...

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு முத்திக் குருநபி       எனவோதி மத்திட்டுவ லித்துச் சிறுபுலி கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட மத்திட்டுடை பட்டுப்  புடைபெயர் தயிரேபோல் மக்கட்குறு  துக்கப் படலையொ துக்கித்திகழ் சொற்கத்    தையுமுரி மைக்கத்தொடு கற்பித் தருள்வது வொருநாளே

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்...

கம்பராமாயணம் கருடத் துதி - வேதமும் கீதையும்

உரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்:

கல்லில் உறைந்த கணம்

Image
கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம். பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம். ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை. கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?). ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள். அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.

Beware of Satirists

Rama knocks off Ravana's crown with a single arrow. And then,.. மாற்ற அருந் தடமணி முடி இழந்த வாள் அரக்கன், ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்-போன்றான் The powerful demon stood having lost his peerless crown (in a whiff), much like someone of great wordly standing, losing fame and stature, due to a single satirical piece of a gifted poet. Whoa!

'தெல்லாம் அப்டியே வர்ரத்தான்'ல?

பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து, எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய, நல் இயல், நவை அறு, கவிஞர் நா வரும் சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான் ராமன் வில் ஏந்தும் அழகை சொல்றார். உலகத்தில் உள்ள பலவகை மொழிகளில் நன்றாக அமைந்த எல்லையில்லாத கடல் போன்ற நூல்களை நன்கு கற்ற, சிறந்த, குற்றமற்ற, கவிஞர்களின் நாவிலிருந்து வரும் சொற்கள் போன்ற குறைவு இல்லாத (தீரவே தீராத) அம்பராத் தூணியை ஏந்தினான். உவமானம் உவமேயம் எப்படி மாத்திப் போட்டிருக்கார் பாருங்க! It's bountiful Like a Poet's tongue His Quiver

One Situation - Two Poets

Kamban's RavaNan castigating VibeeshaNan and Bharathi's Duryodhanan castigating Vidhuran.

விசிஷ்டாத்வைதம்யாங்களே

அப்படின்னா என்ன? படித்ததில் பிடித்த ஒரு விளக்கம் இது: ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல். "தத்துவ ஆழங்களுக்கெல்லாம் செல்லும் அளவிற்கு தெம்பு இல்லை, எது எது எது எது என்று சுருங்கக் கூறுங்களேன்'" என்று மேலோட்ட ஆர்வம் உள்ள பலர் உளர்/ளோம்.

கம்பன் கவிச்சக்கரவர்த்தியா?

சந்த ஒலியில் கட்டுக்குள்ளேயே உழன்றுகொண்டு, மிகையான உவமைகளை மீண்டும் மீண்டும் கையாண்டு, புளித்துப்போகும் அளவிற்கு பெண்ணுடல் பற்றிய வருணணைகளை எழுதியவர் தான் கம்பர், என்பதை மறுக்கமுடியாது. பக்திரசம் என்பதிலாவது அவர் முன் நிற்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு சில நூறு ஆண்டுகள் முன்னர் எழுதிய ஆழ்வார்களின் பாசுரங்களோடு ஒப்பிட்டால் கம்பர் எழுதியவை வெற்றுக்கூவல்கள் என்றே தோன்றுகின்றன. மேலும் சோழர்கள் படைபலம், போர்த்திறம் ஆகியவற்றை மறைமுகமாக மெச்சும் வகையில் யுத்த பகுதிகளை அளவுக்கு அதிகமாக நீட்டி காவியத்தின் சமன்நிலை இலக்கணங்களை முற்றிலும் குலைத்தார் கம்பர்.

Dark Matter

Maureen Chao said after a long train ride she had turned 'dirty and dark like a Tamilian'. A joke, that hasn't gone down well. It seems very obvious to me that she meant 'dirty' as a description of herself at that point in time and 'dark as a Tamilian' is part that is contentious. But many people have taken it to me she DID mean 'dirty as a Tamilian' too which I find befuddling. Now is 'dark as a Tamilian' itself something to take offence to. Well, that depends.

இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்

Faithful readers of this blog, have been made painfully aware, of my bull-headed obsessions about believability in art . I enjoy only the totally convincingly 'real' or something spectacularly fable-like, struggle violently with most things in between. Who is to say, this is how things roll in 'reality'? After meeting Sita, Hanuman ravages through the Asokavanam, hoping his actions will take him to Ravana. Waves of warriors and chieftains are sent to fight him and they meet their gory ends in his hand.

காட்சி ராமாயணம்

கம்பனோட ராமாயணம் காட்சி ராமாயணம். ராமனே அவனுக்கு ராமாயணம் இப்படி நடந்ததுன்னு சொல்லிருக்கான். நரசிம்மனே அவன் முன்னால வந்து இரணியன் வதை எப்படி நடந்ததுன்னும காட்டிருக்கான். அதில திருமகள் வரா. .... கம்பன் ..கண்ணாறப் பார்த்து பாடின பாட்டுக்கள் இது. நினைச்சுப் பாடினதில்லை. பார்த்துப் பாடினது. மர்ரே ராஜம் பதிப்பித்த கம்பராமாயணத்தில் பங்காற்றிய தனது தந்தை, இவ்வாறு சொன்னதாக, 'புலிநகக் கொன்றை' பி.ஏ.கிருஷ்ணன், 'எந்தையின் காலம்' கட்டுரையில் எழுதியிருந்தார். கம்பனின் காட்சியைக் கண் முண் எழுப்பும் விவரணைகள், அவருடைய 'sense of drama' பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். நானேகூட வாயாடியிருக்கிறேன் . வாசகர்களுக்கு மட்டும் தான் வர்ணணைகள் என்றில்லை. கதைமாந்தரின் உரையாடல்களிலும் காவிய நயத்துடன் வர்ணணைகள் இருக்கும். ஆனால், வாசகர்களைப் போல அல்லாமல், கதைமாந்தரான நாங்கள் 'பார்த்தே குறிப்புணர்ந்து கொள்ள' முடியும், என்று சொல்லும் விதமான ஒரு பாடலை நேற்று படித்தேன்... அனுமன் சீதையைப் பார்த்துவிட்டு, அரக்கர்களுடன் சண்டையிட்டு, இலங்கைக்கு தீவைத்துவிட்டு வந்ததை, அங்கதன் முத...

சிறியன சிந்தியாதான்

உரையில் குறிப்பிட்ட பாடல்களை இங்கே படிக்கலாம்.