பீஷ்மாஷ்டமி
இணைக்குறள் ஆசிரியப்பா
கருவிளம் கூவிளம் கூவிளம் புளிமா
வெருவரு நிலையினில் வீட்டுமர் கிடந்(து)
தருமனுக்கு உறுதியாய் நாட்டொழுக்(கு) உரைத்து
கருநிறன் பெயர்களை நீட்டியே பகன்று
திருவுடல் பிரிந்துவான் மேட்டினிக்(கு) அகன்றார்
விரும்பிய வனிதையை தாதைகை கொளவே
திருநதி தனயனோ மாதரை மணவா(து)
ஒருதனி சபதமேற்(று) ஆயுளின் முடிவை
விரும்பிய தினம்பெற மாவரம் அடைந்தான்
பெருமறச் சமரிடை வீழ்ந்தவன் நினைவாய்
ஒருதனி மகன்வழித் தோன்றலும் இலதால்
சுருதிசொல் கிரியைகள் ஆற்றிடும் கடனை
கருமமாய் தமதென ஏற்றனர் பலரே
அருஞ்சொற்பொருள்
வெருவரு நிலை
நாட்டு ஒழுங்கு - ராஜ தர்ம அனுஷாஸன பர்வம்
Comments
Post a Comment