காட்சி ராமாயணம்

கம்பனோட ராமாயணம் காட்சி ராமாயணம். ராமனே அவனுக்கு ராமாயணம் இப்படி நடந்ததுன்னு சொல்லிருக்கான். நரசிம்மனே அவன் முன்னால வந்து இரணியன் வதை எப்படி நடந்ததுன்னும காட்டிருக்கான். அதில திருமகள் வரா. .... கம்பன் ..கண்ணாறப் பார்த்து பாடின பாட்டுக்கள் இது. நினைச்சுப் பாடினதில்லை. பார்த்துப் பாடினது.

மர்ரே ராஜம் பதிப்பித்த கம்பராமாயணத்தில் பங்காற்றிய தனது தந்தை, இவ்வாறு சொன்னதாக, 'புலிநகக் கொன்றை' பி.ஏ.கிருஷ்ணன், 'எந்தையின் காலம்' கட்டுரையில் எழுதியிருந்தார்.


கம்பனின் காட்சியைக் கண் முண் எழுப்பும் விவரணைகள், அவருடைய 'sense of drama' பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். நானேகூட வாயாடியிருக்கிறேன்.

வாசகர்களுக்கு மட்டும் தான் வர்ணணைகள் என்றில்லை. கதைமாந்தரின் உரையாடல்களிலும் காவிய நயத்துடன் வர்ணணைகள் இருக்கும். ஆனால், வாசகர்களைப் போல அல்லாமல், கதைமாந்தரான நாங்கள் 'பார்த்தே குறிப்புணர்ந்து கொள்ள' முடியும், என்று சொல்லும் விதமான ஒரு பாடலை நேற்று படித்தேன்...

அனுமன் சீதையைப் பார்த்துவிட்டு, அரக்கர்களுடன் சண்டையிட்டு, இலங்கைக்கு தீவைத்துவிட்டு வந்ததை, அங்கதன் முதலியோருக்கு விவரிக்கிறான். அவர்கள் பதில்:

'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட
தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்?'என்றார்


பொருதமை புண்ணே சொல்ல - நீ சண்ட போட்டது, ஒடம்புல இருக்குற புண்ணே சொல்லுது
வென்றமை போந்த தன்மை உரைசெய - நீ ஜெயிச்சது, நீ உயிரோட திரும்பி வந்ததுலேர்ந்தே தெரியுது
ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத - ஊருக்கு தீ வச்சது, இங்க வரைக்கும் தெரியுற மாதிரி ஓங்கி வளர்ந்த புகையே சொல்லுது
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட - நீ சீதாதேவியைக் கூட்டிகிட்டு வராதது (அது எவ்வளவு கடினமான செயலா இருந்திருக்கும் 'ங்கறது) எதிரியோட வலிமையைக் காட்டுது
தெரிதர உணர்ந்தேம் - இதெல்லாம் எங்களுக்கு புரிஞ்சிருச்சு
பின்னர், என் இனிச் செய்தும்? - இதுக்கு மேல நீ என்னா சொல்றது?

"கதைமாந்தரே இவ்வளவு கவனிக்கிறாங்கன்னா, வாசகன் நீ எவ்வளவு கவனிக்கணும்"-ன்னு கம்பர் சொல்ற மாதிரி இல்ல?

Comments

  1. Nice post. That's what mother used to tell me after reciting a few verses from the Narasimha Avatara part. She used to say, "In Kamban's poetry you can actually see the scene right in front of your eyes. It is as if a drama is playing in front of you and you are watching it".

    The example you give is very nice. Yup. It is as if an author is teaching us to observe by making his characters observe. And shall I say, nicely observed by you as well :)

    Unfortunately I am not able to get some of the verses from the web. Else they would give a much clear idea of what I meant.

    ReplyDelete
  2. Excellent. Kamban saw what he did and used the characters to express what his mind's eyes saw is what I am able to gather. I have not read a single verse of Kamba Ramayanam yet. Your posts and vaayaadals make me want to read the book. But would like it with an urai. Any ebooks available? Project Madurai la irukkuma?

    ReplyDelete
  3. Thank You Suresh.
    Perhaps the scene in in Yuddha Kaandam - which I am yet to start.

    The text is online

    But you have to go படலம் by படலம் and search for keywords like
    சிங்க
    நரசிம்ம
    ஆள்அரி - a beautiful Tamilization of Narasimmam by NammAzhwAr - which Kamban may have used.
    etc.

    ReplyDelete
  4. Yes got the text yesterday through another post of yours on Kamban. Thanks. And yes, the ஆள்அரி usage does strike a chord with the ஆண்பிள்ளைச் சோறாள்வி Periya Vaachaan Pillai uses to describe Vishnu as Mohini, சோறாள்வி being someone who manages food (a woman) who happens to be an ஆண்பிள்ளை. Kannadasan makes this point in ArthamuLLa Hindu Madham about these Vaishnavite saints blessing Tamil with more words.

    ReplyDelete
  5. Thanks for the link. I actually know a few verses of Yuddha Kandam by-heart :) Just that I am not sure of my memory and also having difficulty getting a Tamil keyboard mapping after shifting to Suse Linux from Windows.

    ReplyDelete
  6. TDM,
    Thanks for comments.
    Sorry for the belated response. I've heard of ஆண்பிள்ளைச் சோறாள்வி. Quite an expression!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar