மராமரம்



தூண்சிற்பம்: திருஇந்தளூர்
பரிமள ரங்கநாதர் ஆலயம்



கம்பராமாயணம்
கிட்கிந்தா காண்டம்
மராமரமப் படலம்



வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,
     தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என, ஒன்றின் ஒன்று
     உள் வயிர்ப்பு உடைய;
தெள்ளு நீரிடைக் கிடந்த
     பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து
     கீழ் போகிய வேர;


பொருள்:
(பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதத்தை தான் உண்ணாமல் பிற தேவர்களுக்கு அளித்த) வள்ளலான இந்திரனின் மகனான வாலிக்கும் அவன் தம்பி சுக்கிரீவனுக்கும் உள்ளத்தே வளர்ந்த பகைமை (வயிரி~பகைவன்) போன்ற ’வயிரம் பாய்ந்த’ (அந்த ஏழு ஆல) மரங்களின் வேர்கள், தெளிய பாற்கடலில் கிடந்து இவ்வுலகைச் சுமக்கும், வெண்மையான படமுடைய ஆதிசேஷன் குடைந்து கீழ ஊர்ந்து சென்ற இடத்தே (அத்தனை ஆழமாக) பாய்ந்தவை.

வால்மீகியில் (வழக்கம்போல) இத்தனை விரிவாக இல்லை:
கிஷ்கிந்தா காண்டம் 12 சர்க்கம்: 3 சுலோகம்

Released with great force, Rama's arrow embellished with gold pierced through the seven sala trees and splitting the mountain terrain entered the earth.

சுக்கிரீவன், இராமன் ஏழு மராமரங்கள் (அரச மரங்கள்) ’பொய்யில் கேள்வி புலமையினோர் புகல் தெய்வமாகவி’யிலேயே உள்ளன. கம்பனில் தான் ஆதிசேஷன்.

Comments

  1. பாயிரத்திலயே இதைக் கொண்டு வருவார் தேரழுந்தூரார்.

    நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
    வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
    எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
    செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே

    ReplyDelete
    Replies
    1. Later, Raavanan disses this 'achievement' when talking to VeedaNan

      ஓட்டை மாமரத்தில் அம்புஓட்டி

      Delete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director