கம்பராமாயணம் கருடத் துதி - வேதமும் கீதையும்





உரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்:



கம்பன் 8251

வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும்,
     மலர்மேல் அயன்தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து
     விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
     துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்
     என, இன்னி பன்னி மொழிவான்:
  


‘”தான் அந்தம் இல்லை; பலஎன்னும், ஒன்று;
    தனிஎன்னும், ஒன்று; “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்என்னும், ஒன்று;
    நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்என்னும், ஒன்று; மறை
    நாலும் அந்தம் அறியாது,
ஆனந்தம்என்னும்; “அயல்என்னும்!-ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?

கம்பன் 8258

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
    மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
     மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
கொல்என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி;
     கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?




சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,
அன்றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்

ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director