சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு
Author's note: One of the purposes of having a blog is to ensure this writers' works are not lost and is passed on safely to posteriority. The following piece was written sometime earlier in the context of RamSene's mild expression of displeasure against pubbing. As it is that time of the year again for cultural preservatives to get active - the writer assures himself of relevance.
சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு
கடந்த ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில், மும்பை விலெபார்லெ மெக்டொனால்ட் சிற்றுண்டி வளாகத்தில் கைத்தடிகளுடன் கூடிய ஒரு பத்திருபது நபர் குழு தடியடி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பெண்கள் உள்பட அங்கிருந்த பல வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் காயப்பட்டனார். சாதாரணமாக குண்டுவெடிப்புகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மும்பை நகரவாசிகள் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இது நிகழ்ந்தேரியது.
லக்ஷ்மண் சேனா
இச்சம்பவத்துக்கு முழுப்பொறுப்பேற்றுள்ளது லக்ஷ்மண் சேனா என்ற அமைப்பு."ராமபிரானைக் காப்பதற்கே அனந்தனின் அவதாரமாகத் தோன்றிய லக்ஷ்மணர் தோன்றினார். அதுபோல, ராமராஜ்யத்தின் பாரம்பரியங்களை காப்பதற்காக லக்ஷ்மணரின் பெயரைக் கொண்டு செயல்பட்டுவருகிறோம். இது அரசியல் சார்பில்லாத, சமூக பொதுநல இயக்கம்" என்று அதன் தலைவர் திரு.பல்வந்த் போன்ஸ்லே தெரிவித்தார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், இந்திய இளைஞர்களின் உணவு பழக்க வழக்க சீர்கேட்டைத் தடுத்து நிறுத்தவே தாம் இதை செய்ய நேர்ந்ததாகச் சொன்னார்.
உணவுப் பாரம்பரியம்
கொழுப்புச்சத்தும், மிகை இனிப்புச்சுவையும் மிகுந்த உடலுக்கு மிகவும் கெடுதலான 'ஜன்க் ஃபுட்' பழக்கத்தினால் இளைஞர்களிடையே நீரிழிவு நோயும், இதயக் கோளாருகளும் பெருகி வருவதாக அவர் புள்ளிவிவரங்களை அடுக்கினார். இந்தியாவின் பெருகிவரும் உயிர்க்கொல்லியான இந்த பழக்கத்தை தடுத்து நிறுத்துவே இவ்வாறு செய்தோம். இது எங்கள் கடமை என்றார் அவர். பாரம்பரிய உணவு வகைகளை விடுத்து அன்னிய மோகம் கொண்டு இதைப் போன்ற விஷ உணவுகளின் பக்கம் நமது நவநாகரிக பெண்டிரும் போவது வருத்தத்துக்குரியது என்றார் அவர். "பெண்களை தாயாக, அன்னலக்ஷ்மியாக பாவிக்கும் பாரம்பரியம் நம்முடையது. வழி தவறிச்செல்லும் ஆண்களை திருத்தும் பெரும் பொறுப்பை நம் மரபு அவர்களுக்குத் தருகிறது. அதை விடுத்து அவர்களும் இது போன்ற இழிவான மேற்கத்திய பழக்கங்களுக்கு அடிமையாவது வருத்தத்துக்குரியது" என்றார் அவர்.
வன்முறை
தடியடிகளை வன்முறை என்று பார்ப்பது மேலோட்டமானது என்றும் திரு போன்ஸ்லெ கூறினார். பல்லாயிர வருட தொன்மை கொண்ட நமது கலாசாரத்தின் மீது, மேற்கத்திய நாகரீகம் வணிக ரீதியாக வன்முறை நடத்துகிறது. சர்வத்தையும் சந்தைப்படுத்தி, மலிவான விளம்பரங்களினால் 'விரும்பத்தகுந்த' வாழ்க்கை முறையாக ஒரு பகட்டு வாழ்க்கை முறையை நம்மிடையே பரப்பி வருகிறது என்றும், அதன் ஒரு அம்சமாகவே இந்த வெறுக்கத்தக்க உணவு பழக்க முறையை பார்க்க வேண்டும் என்றார் அவர். ஜனநாயக முறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்று தெரிவித்த அவர், இதனால் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்றார். இத்தகைய ஸ்தாபனங்களை மூடிவிட்டு நல்ல சுவையான, தரமான தேசிய உணவு வகைகளை ஏழை எளிய மக்கள் உண்டு சுவைக்க அரசாங்கம் வழிவகைகள் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வினைகள்
சிவசேனா தலைவர் பால் தாக்கரே இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். உங்களுக்கு ஏற்பில்லாதது லக்ஷ்மண் சேனாவின் கொள்கையா அணுகுமுறையா என்று கேள்விக்கு, "புதியவர்கள் என்றுமே மூத்த தலைவர்களை ஆலோசித்து செயல்பட வேண்டும். அது தான் நமது பாரம்பரியம்" என்று மட்டும் தெரிவித்தார். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பீட்ஸா ஹட் ஸ்தாபனங்கள் முன் மறியல் செய்யப்போவதாக அவர் அறிவித்தார். மஹாராஷ்ட்ர நவ்நிர்மான் சேனா டாமினோஸை குறிவைப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் காவல் துறை ஆணையர் கார்ஸன் தி-குன்ஹா, இந்த குண்டர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். அலிக் பதம்ஸி தலைமையில் பாலிவுட் நடிகர்கள் 'ரைட் டு கொலஸ்டரால்' என்ற பெயரில் முதல்வர் அலுவலகம் வரை கோஷமிட்டு ஊர்வலம் செல்லத் தீர்மானித்துள்ளனர்.
இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரேவை சந்தித்து, முதல்வர் அசோக் சவான் "காவல் துறை தன் கடமையைச் செய்யும் நீங்கள் ஜூஸை குடியுங்கள்" என்று சொல்லி உண்ணாவிரதத்தை இனிதே முடித்து வைத்தார். இந்தப் பிரச்சனைக்காக அவர் பதவிவிலகப்போவதில்லை என்றும், அரசாங்கம் வன்முறையாளர்களை எதிர்க்க ஆவன செய்யும் என்று பத்திரிக்கையாளர்களிடம் அவர் உறுதி அளித்தார்.
அடிபட்ட மெக்டொனால்ட் ஊழியர் லக்ஷ்மண் சாடே, "இத்துடன் வறுவல் வேண்டுமா" என்ற ஒற்றைக்கேள்வியை மட்டும் சொல்லியபடி மருத்துவமனையில் சுயநினைவின்றி கிடப்பதாக நம் நிருபர் தெரிவிக்கிறார்.

கடைசி வாக்கியத்தில் Woody Allen-ன் வலுவான தாக்கம் தெரிகிறது. குறிப்பாக Remembering Needleman என்கிற கதையில் வரும் "His last, enigmatic words were, "No thanks, I already own a penguin."" என்கிற வரிகளை.
ReplyDeleteYes...I agree with the cultural preservatives with a pinch of salt! as it is Bombay..that is Mumbai which is bleeding is rubbed with too much of salt!!!
ReplyDeleteநன்றி பேயோன். கதை இப்பொ படிச்சேன். புரிதலை கட்டாயப்படுத்துவது இலக்கிய ஆர்வலனுக்கு அழகல்ல என்பதால் ஆங்காங்கே கிடைத்த புன்முறுவல்களோடு இப்போதைக்கு விட்டுவிட்டேன்.
ReplyDelete:-) @ Mr.Narayanan