வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்

சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும்போது இலக்கியம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறது அல்லவா. எனக்கும் அப்படியே. அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும். வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்... - சுஜாதா - இலக்கியச் சிந்தனை '75 சிறுகதைத் தொகுப்பு முன்னுரை.


இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு மாதமும், அம்மாதம் பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வருடமும் அப்பன்னிரெண்டு கதைகளில் ஒன்றை தேர்வு செய்து பரிசளித்து, பன்னிரெண்டு கதைகளைச் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. தேர்வு செய்பவர் தன் தேர்வை விளக்கி முன்னுரை எழுதுவது வழக்கம்.

‘75ல் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர் சுஜாதா. (அவர் தேர்வு செய்தது வண்ணதாசனின் தனுமை). அந்த முன்னுரையின் தெளிவும், சரளமும் அவரில்லாத வெறுமையை இன்னும் அடிக்கோடிடுகின்றன. சில பகுதிகள்:

நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்துக்கொண்டிருப்பாட்கள் என்று தோன்றியது. ….ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கு சில சொந்த தியாகங்களும் பலிகளும் தவிர்க்க முடியாதவை. அவைகளில் ஒன்று சில துல்யமான வாசகத் தன்மைகளை இழப்பது. நானும் இழந்திருக்கிறேன்.

எல்லோரிடமும் ஆபாசங்களும் உன்னத நிலைகளும் இருக்கின்றன. ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கிறது. வாசகன் ஒரு நல்ல சிறுகதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளையே மறுபடி வாழ்கிறான். அவன் மனத்தில் ஞாபக பிம்பங்கள் தோன்றலாம். பச்சாதாபம் எழலாம், வாழ்வின் அபத்தங்கள் தெரியலாம். அவலங்கள், அதன் சந்தோஷங்கள் தெரியலாம். ஆனால் இவைகளைக் குறிப்பிட்டு காட்ட வேண்டியவன் எழுத்தாளன் அல்ல. இதோ பார் வாழ்வின் அபத்தம், இதோ பார் வாழ்வின் அநியாயம் என்று விரல் நீட்டும் போது சிறுகதை தரத்தில் சரிந்து விடுகிறது. வாழ்க்கையின் தீர்ப்புகள் அவ்வளவு சுலபமானவை அல்ல.

அப்படியே நேற்று வாலியின் நுண்கவித்தெறிப்பிலிருந்தும் ரெண்டு சொட்டு:

செம்மொழி மண்டபத்தை எழுப்பியவர் பரிதிமால் கலைஞர்
எனும் சூர்யநாராயண சாஸ்த்ரி
கட்டி முடித்ததோ கலைஞர் எனும் மேஸ்த்ரி
எதிரிகள் வாயில் போட்டார் ப்ளாஸ்த்ரி…

Comments

  1. மிக நான்லீனியரான ஓர் இடுகை. வாலியின் தெறிப்புகளில் வாழ்வின் அபத்தமும் அநியாயமும் விரல் நீட்டி காட்டப்படுவதாகவே தோன்றுகிறது, என்னதான் அவர் எழுதியது சிறுகதை அல்ல என்றாலும். எழுத்துரு அளவு சற்றுச் சிறியதாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. Do you attend the Ilakiya Sinthanai annual meetings on Tamil new year's day?
    I have been going for a few years now.
    But only the U and W generation seems to attend these things... : (
    Vaakiyathai Kazhatri paarakalam is a good sujathism : )

    ReplyDelete
  3. பேயோன்,நீங்க சொல்லி தான் நான்லீனியரிட்டி தெரிந்தது என்றாலும், தெரிவதற்கு முன்பே அவ்விடுகையை இட்டுவிட்டதால் நான் நாந்லினியாரிட்டியை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    வாலியார், தன் கவிதையை இடையில் நிறுத்தி, புரியாதவர்கள் தெளிவடையும் வகையில் 'வெண்பா' என்று சொல்லி கவனத்தைக் குவிக்கச் செய்தார்.

    MutruppuLLi, I don't. I am am not a fan of literary meetings in general.The monthly meetings happen on last Saturday evenings in Alwarpet Srinivasa Gandhi Nilayam, with even sparser attendees. I've tried it a couple of times.

    However, I hear in the annual meet this time Amshan Kumar had an interesting presentation on literature in cinema (with clips etc). Did you attend?

    ReplyDelete
  4. //i am not a fan of literary meetings in general//

    Thank god

    ReplyDelete
  5. This year's meeting tested my patience...It almost seemed that they had to do the annual thing because it was a tradition...I wish some one from the younger generation
    takes over and makes it a little more interesting.
    I didn't stay for the whole of Amshan's talk...Quiet a bad talk in my opinion...I didn't see the clips though.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director