வீடணன் புலம்பல்

தாதைதோ தாதி தாதை தூதீதோ

தாதைத்தூ தாதை தூதீ தீதீதோ

தூதத்தை தாதீ தீதோ தீதோதா

தாதை தித்தித்த தோதாதீ தீதே

 

வகை: கலிவிருத்தம்

ஏக அக்ஷரம்: தகவருக்கப்பாடல்


 

சந்தி பிரித்து

 

தாதை தோது ஆதி தாதை தூ தீதோ?
தாதைத் தூ தாதை தூது ஈ தீ தீதோ?
தூ தத்தை தா தீ தீதோ? “தீது ஓதா
தாதை தித்தித்த தோதா தீ தீதே

 

விளக்கம்

 

1.   தாதைக்கு தோதாஆதி தாதையின் தூ தீதோ?
தன் தந்தையாகிய தயரதனுக்கு இசைவாக நடந்துகொண்ட
இந்த உலகுக்கே தந்தையான இராமனின் பகை (தூ), தீமையானதா?

2.   தாதைத் தூவும் தாதையைக் கொண்ட தூதுவன் ஈந்த தீ தீதோ?
பூந்தாதுக்களை பரவச்செய்து உயிர்களை நீட்சிபெறச்செய்யும் வாயுவின் மைந்தனான அனுமன்
நமக்கு அளித்த ஆசோகவனத்தீ தீமையானதா?

3.   தூய்மையானவளும்தத்தை (கிளி) போன்றவளுமான சீதை, உட்புகத் தாவிய தீ தீதோ?

4.   (இவை யாவை கொடுந்தீ அல்லமாறாக)  தீது எதையும் ஓதாத* தாதைக்கு (என் தந்தையாக விளங்க்கிய இராவணனுக்கு) தித்தித்த (இனிதெனக் கொண்ட) தோதா (பொருந்தாத காமத்) தீ தீதே



* தீது ஓதா - நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த உடையவனாகத் திகழ்ந்தவன் இராவணன்



Comments

Popular posts from this blog

Drums Mani

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director