காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில் ; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் ; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்து விட்டால் வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.
கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம். பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம். ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை. கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?). ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள். அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம். மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட, சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட, தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ! - வில்லிப்புத்தூரார்