அப்படின்னா என்ன? படித்ததில் பிடித்த ஒரு விளக்கம் இது: ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல். "தத்துவ ஆழங்களுக்கெல்லாம் செல்லும் அளவிற்கு தெம்பு இல்லை, எது எது எது எது என்று சுருங்கக் கூறுங்களேன்'" என்று மேலோட்ட ஆர்வம் உள்ள பலர் உளர்/ளோம்.