கவரிமாவும் மானமிலா பன்றியும்
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே Varaha @ Badami இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம். பொருள் : வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து - திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி . என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது? கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும். 1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் மானமிலா என்பதை ஹேயமானதொரு உருவுகொண்ட என்று உரைக்கிறார். ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால் 'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார். அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படி...