கவரிமாவும் மானமிலா பன்றியும்
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே
Varaha @ Badami |
இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம்.
பொருள்:
வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து - திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா
இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி.
என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது?
கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும்.
1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் மானமிலா என்பதை ஹேயமானதொரு உருவுகொண்ட என்று உரைக்கிறார்.
ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால் 'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார்.
அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படியொரு அதீத சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு பல்லாயிரப்படு ஈடு எழுதப்பட்டு பற்பல ஆழமான வாசிப்புகள் உள்ளன. ஆனால் நாச்சியார் திருமொழிக்கு அவ்வாறு ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை.
நாலாயிரம் மொத்தத்திற்கும் உரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை ஒருவரே. அவரது கருத்தை ஒட்டியே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியிருக்கக் கூடும். அதனால் இதை வைஷ்ணவ சம்ப்ரதாய உரையின் தரப்பு என்று (மேற்கொண்டு தேடாமல் சோம்பலோடு) எடுத்துக்கொள்கிறேன்.
வேறு பொருள் உண்டா
பக்தர்களுக்கு மானம் பார்க்காமல் இறங்கி வந்து அருள்வான் - என்றும் பொருள் கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் மேலோட்டமான பொருட்கோள்.
திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தின் பேரா.மா.வரதாரஜன் தொகுத்த 'அருளிச்செயல் அருஞ்சொற்பொருள் அகராதி'யிலும் 'மானமிலா பன்றி' என்பதற்கு 'மானம் அவமானம் தெரியாத மன்றி' என்றே பொருள்சொல்கிறது. இந்நூல் வ்யாக்யானக்காரர்கள் அடியொற்றி எழுதியபடியால் இதையே மரபுவழிப்பொருள் என்று கொள்ளலாம்.
இணையத்தில் எழுதும் பிற சிலர், அப்படி ஒரு அர்த்தப்படுத்துதலை ஏற்கத் தயங்கி 'மானமிலா' என்பதை 'அளவில் ஈடற்ற' , 'அளவிலா பெருமை உடைய' என்றெல்லாம் எழுதவதைப் பார்த்தேன்.
மானம் என்ற சொல்லுக்கு 'அளவு' என்று பொருள் உண்டு. அதனால் 'மானமிலா' என்பதற்கு 'அளவிலா'.....அதாவது மாபெரும் என்று பொருள் கொள்ளலாம், என்றும் ஒரு கருத்தைப் படித்தேன். இது கொஞ்சம் 'வலிந்து பொருள் சொல்வது' போலவே எனக்குப் பட்டது. அவர்கள் யாரும் தாங்கள் எந்த உரையாசிரியர்கள் எடுத்தாள்கிறார்கள் என்று விளக்கவில்லை.
அகவுரை
காலஞ்சென்ற எனது பாட்டனார், மானமிலா என்பதற்கு 'உபமானமிலா' என்று பொருள்சொல்வாராம். முதற்குறை என்று ஒரு தமிழ்ச்செய்யுள் உத்தி உண்டு எ.கா: தாமரையை மரை என்று எழுதுதல். அதனால் இது அழகான விளக்கம்தான். என்றாலும், ஆண்டாள் வேறெங்காவது 'முதற்குறை' என்ற உத்தியை பயன்படுத்தியிருக்கிறாரா என்று ஆராயாமல் இந்த பொருளையும் ஏற்க இயலாது.
கவரிமா
திருக்குறளில் நாம் யாவரும் அறிந்த ஒரு குறள்
மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
‘மயிர் இழந்தால் உயிர்துறக்கும் கவரிமா (yak) போன்றோர் மானத்துக்கு கேடு வந்தால் உயிர்துறப்பர்’ என்ற பொருளும் நாம் அறிந்ததே.
(திருத்ததம், courtesy @elavasam)
‘மானம் வரின்’ என்ற பதம் எப்படி ‘மானத்துக்கு கேடு வரின்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது? பரிமேலழகர் ‘மானத்துக்கு எல்லை வரின்’ என்று உரைசெய்கிறார். இவ்வாறு ‘இட்டு நிரப்பாது’ மானம் என்ற சொல்லுக்கு வேறேதும் பொருள் கொள்ள இடம் உண்டா?
முனைவர் கு.வெ.பாலசுப்ரமண்யம் |
தொல்காப்பியத்தில்
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
போன்ற சூத்திரங்கள் உள்ளன.
இங்கு மானம் இல்லை என்றால் 'குற்றம் இல்லை' என்று பொருள்.
அதாவது குறிப்பிட்ட இடங்களில் வல்லெழுத்து/ மெல்லெழுத்து மிகுந்து வருதல் குற்றம் இல்லை, என்று விளக்கும் சூத்திரங்கள் இவை.
இப்போது ‘மானம்’ என்ற சொல்லுக்கான இப்பொருளை, மேற்சொன்ன திருக்குறளில் இட்டுப் பார்த்தால், அக்குறளின் பொருள்: 'குற்றம் வரின் உயிர்துறப்பர் கவரிமா அன்னார்'
இது புதிய, பொருத்தமான விளக்கமாக எனக்குத் தோன்றியது.
Port to நாச்சியார் திருமொழி
அதேபோல, ‘மானம்’ என்ற சொல்லிற்கு உள்ள இந்தப் பொருளை நாச்சியார் திருமொழி பாசுரத்தில் இட்டுப் பார்த்தால்:
‘மானமிலாப் பன்றி’ என்பதற்கு ‘ குற்றமற்ற வராக அவதாரம்’ என்று பொருள் கொள்ளலாம்: புறத்தே மாசுள்ள உடம்பில் நீர்வாரத் தோன்றினாலும், அவன் பவித்ரமான வராஹன்...என்று.
பொருள்கொள்ளுதல் தயக்கம்
ஒரு திருக்குறளை தனியாக எடுத்துக்கொண்டு பொருள்கொள்வது சிறப்பன்று. அதன் அதிகாரம் சார்ந்து பொருள்கொள்வதே பரிமேலழகர் பின்பற்றும் முறைமை. ஆதலால், மானம் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளுக்கு மட்டும், மேற்கூறிய தொல்காப்பியப் பொருட்கோளின் பொருத்தப்பாட்டைப் பற்றி நாம் சற்று கவனமாக சிந்தித்து, தயங்கத்தான் வேண்டும். ஏனெனில் ‘மானம்’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் ஒரு குறளுக்கும் மட்டும் ‘மானம்’ என்ற சொல்லுக்கு ‘குற்றம்’ என்ற பொருள்கொள்ள முடியுமா என்பதே நம் தயக்கமாக இருக்கும்.
Courtesy: ஶ்ரீ Keshav |
ஆனால் வைணவ உரை மரபிலோ, ஒரு சொல்லைச் சிறப்பிக்கும் பலவித வாசிப்புகளுக்கும் இடமுண்டு. எனவே ஆண்டாள், ஆர்வமிகுதியில்கூட, இங்கு திருமாலை எந்தப் பழிச்சொல்லாலும் குறிப்பிடவில்லை என்றும் நாம் கொள்ளலாம்!
அது கவரிமான் இல்லை. கவரிமா, ஆங்கிலத்தில் Yak. இது குறித்து ஹரி அண்ணாவின் விளக்கம்.
ReplyDeleteஇணையத்தில் ஆறேழு வருஷம் முன்னாடி பேசி முடிச்சாச்சு. கவரிமா என்பது yak என்று சென்னைப் பல்கலைக்கழக அகராதி குறிப்பிடுகிறது. இந்த யாக் மயிர் நீப்பின் உயிர் வாழ முடியுமோ? வாழும் இடம் அத்தகையதல்லவா, யாக் பற்றி வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது என்பது விஷயம். பனிமலையில் வாழும் இனம் எதுவாகினும் அதன் முடியே அதற்குக் கம்பளம்; குளிர்ப் பாதுகாப்பு. இவ்ளதான் சொன்னாரு வள்ளவரு. ‘யப்பா, மயிரை ஒட்ட மழித்துவிட்டால், எப்படி இயற்கை அளித்த பாதுகாப்பை இழந்து குளிரால் வருந்தி அது இறக்குமோ, அப்படி, மானத்துக்குக் கேடுவரும்படி, அதைக் களையும்படியான செயல் நடந்துவிட்டது என்றால், உயிரையே விட்டுவிடுவது கவரிமா அன்னாரின் பிறப்பு இயற்கை. (அப்படி, கவரிமா அன்னார் என்று க்வாலிஃபை பண்ணியிருப்பதால், காண்டாமிருகம் அன்னாரும் உண்டாம் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்லியிருப்பதும் வெளிப்படையே.)
கோடை காலத்தில் இதன் முடியை நீக்கி, கொத்துக் கொத்தாகக் கட்டி, விசிறி இரட்டப் பயன்படுத்துவார்கள். எனவேதான் அத்தகைய முடித்தொகை கொண்ட வீசு கருவிக்கே கவரி என்று பெயர் வந்தது. மஹாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பில் கவரி இரட்டும் இடங்களிலெல்லாம், fanned with yak tail என்று மொழிபெயர்த்திருப்பதைப் பார்க்கலாம்.
நன்றி.
Deleteஇடுகையைத் திருத்திவிட்டேன்.
கவரி என்பது விலங்கு மயிர்க்கான பொதுப்பெயர் என்றே எண்ணி இருந்தேன்.
அது குறிப்பாக இவ்விலங்கிற்கான பெயர் என்ற தகவல் TIL.
Below is from a great Vaishnava scholar acquaintance which you might find interesting. I had emailed your blogpost link asking him what his interpretation of "maanamila panri" was and he replied.
ReplyDeleteJust to clarify, his view is that the vyaakhyanakaras usually hesitated to quote the azhwars directly, instead using only the "accepted" sources like praasthana trayis to support their arguments in their formal works. However the works like ShriBhashyam are replete with near verbatim translations of nammazhwar if one reads closely and is familiar with both works. The first sentence below should be read in that context.
"Though the vaishnavite aachaaryas inclusive of the commentators, out of fear of acceptance by brahmins of sources in Tamil, do not acknowledge it, the rahasyathrayas and the charamas'lokas were indicated by the aazhvaars Aandaal inclusive.Besides the verse you are considering which brings forth the s'lokas स्थिते मनसि सुस्वस्थे... treated as Varaahacharamas'loka, Aandaal recalls the s'loka in Sriraamaayanam सकृदेव प्रपन्नाय... treated as the Raamacharamas'loka in the verse முல்லைப்பிராட்டி.... I leave it to you to trace the references to Githacharamas'lokam and the other two rahasyas in these works.The commentators and their followers think that God should be taken with attributes which reveal His greatness and labour a lot to keep up this principle forgetting that more than anything else His greatness lies in lowering Himself to any extent to take care of His subjects. You might remember that the Tamil word மானம் is used often to mean பெருமை in common parlance. Its derivation in sanskrit is from मनं thought and it stands for mental evaluation( This is the reason for the word being used for measure like परिमाणं)or esteem. The first three lines of the said verse thus translated mean: That Lord with radiance ( தேசு- तेजस्) and great currency(செல்வனார்)Who has stationed Himself in S'riirangam and Who (while lifting) once long back as an esteemless pig with water streaming out from His dirty body (spoke words) to the lady earth who was as sediment(under the ocean)covered by பாசி(algae). The last line means: the words spoken cannot be taken out even if attempted. Aandaal wants to say that the Lord descends to any level caring the least for His greatness to protect His subjects. The relevant s'loka also mentions remembering His subject and leading Him by the great way. He suggests such a subject when fit just remembers Him as unborn and having the form of the entire cosmos(with all elements, phenomena, concepts, ideas etc.). This really means the அடிமை to Him. Hope you will be able to follow what I have written. Note that Aandaal' wants the Lord's blessings to realize her அடிமை which really means His constantly being with her(without separating) and taking charge of the functions of her மனோவாக்காயம்"
Sir/Ma'am,
Deletethank you so much for this.
/ their followers think that God should be taken with attributes which reveal His greatness and labour a lot to keep up this principle forgetting that more than anything else His greatness lies in lowering Himself to any extent to take care of His subjects./
Touché.
Quite, the most poignant and wonderful reading is indeed the direct one, as the comment elaborates.
All additional readings are vastly secondary in import and at best serve the fancy for those who can possess more enthusiasm than reverence.
Mine here was perhaps merely sparked by 'I came across an alternate meaning for a word, now let me try and connect dots and see how it looks' kind of curious impulse and little more!
My praNAms to your scholar acquaintance.
"Sir" thaan :)
Delete"Mine here was perhaps merely sparked by 'I came across an alternate meaning for a word, now let me try and connect dots and see how it looks' kind of curious impulse and little more! "
Understood. And I forgot to mention that I enjoyed your "connecting the dots" exploration very much. I didn't know about the tholkappiyam usage, that was very interesting and indeed the translation as kuttram seems most apt there.
Btw, in a follow up email exchange from the same Acharya he writes
"I perhaps should have pointed out that Thirumangai aazhvaar uses. மானம் in the sense of esteem in மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம்"
referring to the below:
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்!
"
//Sir" thaan :)//
Delete'Sir/Ma'am' seems to always do the trick when an anon posts :-)
/enjoyed/
Thank You.
I had sent this up to magazine and hadn't heard back for a looong time. So I thought I'd blog it as I have a duty towards posterity.
And then @elavasam duly pointed out the glaring glitch: கவரிமான் . Furthermore your comment brought attention to the proper traditional explanation.
But, as luck would have it, looks like what I sent up may see print. Slightly embarrassed now!