மிகவோர் காலம் இனியில்லை
மத்தேயு 8 21 யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். 22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும் ” என்றார். திருவாசகம் - யாத்திரைப்பத்து நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே.