ஏனை எழுத்தென்ப
முனைவர். வினோத் ராஜன் (அவலோகிதம் புகழ்), யுனிகோட் ஸங்கத்தார்க்கு ஸமர்ப்பித்த விஞ்ஞாபம் கண்டோம்.
இதற்கு விரோதபிப்ராயங்கள் எழுந்துள்ளனவாம். தெலுங்கு பாஷையின் ப்ரயோக லிபியில், தமிழின் ப்ரத்யேக அக்ஷரங்கள் இரண்டினை ஸங்கமஞ் செய்வதால், தெலுங்கின் ஆதார ஶ்ருதியே க்ஷீணித்துப் போகும் என்றும்; நாளை பிற பாஷைகளுக்கும் இந்த ஸ்திதி ஏற்பட்டுவிடும் என்ற அதீத ஜாக்ரதை உணர்வும் மேலிட்டிருப்பதை அறிந்தோம்.
இதுகாறும் தேவநாகரி லிபி அறியாத, எம்மைப் போன்ற தமிழர், ஸமஸ்கிருத ஶ்லோகங்களை, ஸமஸ்கிருதம் என்று நன்கறிந்து (அது தமிழென்று சற்றும் மயங்காது) ஓரளவாவது மூல ஒலி துல்லியத்துடன் வாசிக்க இயைவது கிரந்தானுஷ்டாத்தாலே அன்றோ?
என்ன ஒன்று, நம்மூரில் கிரந்தம் புழங்கியதற்கு நீண்ட நெடும் சரித்திரம் உண்டு. அதனால் 'கிரந்த அக்ஷரங்கள் தமிழ்தட்டச்சுப் பலகையில் இருக்கலாமா கூடாதா?' என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.
சரித்திரத்தில் இருந்திருக்கிறது, அதனால் தட்டச்சு பலகையில் இருந்தாகவேண்டும். அவ்வளவு தான்.
ஆனால் அவ்வெழுத்துக்களை இனி எழுதுபவற்றில் (வ்யாஸங்களிலும், ஸாஹித்யங்களிலும்) உபயோகஞ் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்லும் 'கிரந்தம் தவிர்' தரப்புக்கு அனேக நியாயங்கள் உண்டு. 'வடவெழுத்து ஒரீஇ தான்' நமது ப்ரதம வ்யாகரணாசாரியாரின் போதனை. அவர் பின்வந்த வ்யாகரணாசாரியார்களும் சரி, ஸ்ருஷ்டிகர்த்தாக்களும் சரி, அதை அனுஷ்டித்தே வந்தனர்.
அதெல்லாம் வேறு விஷயம்.
க்ரந்தாக்ஷரம் தமிழ்தட்டச்சுப் பலகையில் இருப்பதாலேயே, இன்று அந்நிய பாஷை வார்த்தைகள் மீள்புகுமென்று பயப்படத் தேவையில்லை. இன்று அப்படி ஶ்ரமப்பட்டு 'வ்யத்யாஸமாக எழுதுகிறேன் பேர்வழியே' என்று எழுதும் சில வம்பர்களின் எழுத்து கூட, வாசிக்க நாதியற்று அம்போவென்று கிடக்கிறது. ஆதலால், விசனம் வேண்டாம்.
அதேபோல, ௸ 'தெலுங்கில் தமிழாக்ஷரம்' வ்யவஹாரத்தில், இப்போது ரௌத்திரம் கொள்வோர் கேட்கவேண்டிய ஒரே கேள்வி இது மட்டும் தான்: இதுவரை ஏதாவது தெலுகுமொழி பனுவல்களில் ற, ழ உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதா?
உபயோகப்படுத்தப்பட்டிருப்பதற்கான சில உதாரணங்களை விஞ்ஞாபத்திலேயே அளித்திருக்கிறார் முனைவர். வினோத் ராஜன்.
இருக்கிற பனுவல்களை எழுத, அவை எவ்வளவு சின்னஞ்சிறு குழுவுக்கு உரியதாக இருந்தாலும், அவற்றிற்கு ஏதுவாக தட்டச்சுப்பலகையை விரிக்கக் கோருவது பிழை இல்லை. சொல்லப்போனால், அது அவஸ்யம்.
உபகரணம் கிட்டியபின், "இனி எழுதும் புதிய எழுத்துக்களில் அவற்றை உபயோகப்படுத்தாமல் பகிஷ்காரஞ் செய்யுங்கள்" என்று ப்ரசாரம் செய்துகொள்ளலாம். அது வேறு விஷயம்.
இன்னும் சொல்லப்போனால், அந்த ப்ரசாரம் கூட இங்கு தேவைப்படாது. இயல்பிலேயே இதன் பயன்பாடு அந்தக்கட்டுக்குள் தான் இருக்கப்போகிறது, என்பது தெளிவு.
இன்னொரு விஷயம்: கலாசார பரிவர்த்தனை வரலாறு தான் இந்தக் கோரிக்கைக்கு ஆதாரம். அதை புரிந்துகொள்ள மறுத்து, "ஜப்பான் மொழியில் ஸிரில்லிக் எழுத்தைப் போட விடுவீர்களா?" என்ற வகையான அதுபுத்திசாலித்தனாமன கேள்விகளை கேட்பது விதண்டாவாதம்.
திருப்பாவை வாசிக்கும் தெலுங்கர்கள் இந்த ற/ழ வை இனி பயன்படுத்துகிறார்களா இல்லையா, என்பது அவர்கள் முடிவுசெய்துகொள்ள வேண்டியது.
சற்றே விலகியிரும் பிள்ளாய்.
பின்குறிப்பு: மகாதேவ் தேசாய், நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஒரு செய்தியைக் கூறுகிறார். தமிழக ஸௌராஷ்டிரர்கள் தங்கள் மொழியை தெலுகு-தமிழ் எழுத்துகள் கலந்த எழுத்துகளில் எழுதி வந்ததாகவும், அது காலப்போக்கில் மறைந்துவிட்டதால் அவர்கள் தேவநாகரியை கைகொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
தேவநாகரியை தேச லிபியாக்கும் முனைப்பு தேசாய் கடிதத்தில் வெளிப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். என்றாலும், ஸௌராஷ்டிரர்கள் தமிழகம் வந்த கலாசார வரலாற்றுப் பின்புலம் சார்ந்து, அவர் சொன்ன தகவல் உண்மைச்சாத்தியத்தை அளவிட்டுக்கொள்ளலாம். இச்செய்தி உண்மையாக இருப்பின் மிக சுவாரஸ்யமானது அல்லவா?
இப்பொழுது தமிழக ஸௌரஷ்ட்ரர்கள் தங்கள் மாத்ருபாஷயை ப்ராமி அடைப்படையில் லிபி தயாரித்து யூனிகோடில் ஏற்றியுள்ளனர்
ReplyDeletehttps://en.wikipedia.org/wiki/Saurashtra_(Unicode_block)
கிரந்தத்தின் அடிப்படையில் தங்கள் லிபியை செய்யவில்லை. Surprising
I can't see the letters there (needs some download I guess).
DeleteI went to the Saurashtra script Wiki page: https://en.wikipedia.org/wiki/Saurashtra_script
It has some samples of the letters we can see.
Aluminum - Titsanium Paint - Titsanium Arts
ReplyDeleteTitsanium Paint Description: Aluminum is the type of paint which has been around for thousands of ford fusion hybrid titanium years! titanium key ring This is the first paint in remmington titanium the world to be titanium trim reviews Rating: womens titanium wedding bands 4.9 · 7 reviews