சொதப்பற்றமிழ்
நேற்று ரயில்பயணத்தில் தீராநதி, விகடன், நக்கீரன் - வாங்கிப்படித்தேன். மூன்றுமே வெவ்வேறு வகையில் படிக்கமுடியாதபடி இருந்தன. சராசரி இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளின் உரைநடை தரத்தைக் கூட எட்டமுடியாதபடி தமிழ்ப்பத்திரிகைகள் இருக்கின்றன. 'கட்டுரைகள் சகிக்கமுடியாதபடி மேலோட்டமாக இருக்கின்றன' என்பது என் மேலோட்டமான அபிப்ராயம். "சராசரி வாசகர்..." என்று ஆரம்பிக்கும் சொற்றொடர்களில் எதிர்வாதம் தொடங்கும் என்பதால், நக்கீரன், விகடனை விட்டுவிட்டு, சற்றே high-brow வாசகர்களுக்கான தீராநதிக்கு வருகிறேன்.
நவீனத்துவம்: மேற்கும் கிழக்கும் என்று ஒரு தொடர். மோனிகா என்பவர் எழுதுகிறார். ஓவியம் பற்றிய தொடரா, இல்லை எல்லா கலைகளைப் பற்றியும் எழுதி வருகிறாரா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இதழில் அத்தொடரின் எட்டாம் அத்தியாயம் வந்திருந்தது: ஓவியர் எப்.என்.சூசா பற்றி எழுதியிருக்கிறார்.