குளிக்கப் படுத்தும் கண்ணன்
இன்று ஸ்ரீஜெயந்தி. வருடந்தோரும் இதையொட்டி கொஞ்சம் பெரியாழ்வாரைப் புரட்டிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இம்முறை கிடைத்த சில முத்துகள் இதோ:
யசோதை கண்ணனைக் குளிக்க வைக்க படாதபாடு படும் பாடல்கள் (பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் நான்காம் திருமொழி)
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானேசிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னேமறந்தும் உரையாட மாட்டேன். மஞ்சனம் ஆட நீ வாராய்
நீ பொறந்த நாள்லேர்ந்து, எனக்கு பாலோ, வெண்ணையோ கெடச்சதேயில்ல. (ஏன்னு உனக்கே தெரியும்). 'இவெல்லாம் ஒரு அம்மாவா'-ன்னு எல்லாரும் சொல்லீருவாங்கன்றதால, மறந்துகூட நீ செய்ற அட்டூழியத்தைப் பத்தியெல்லாம் வெளி ஆளுங்க கிட்ட சொல்லமாட்டேன். குளிக்க வா கண்ணா.
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த மேனிகாணப் பெரிதும் உகப்பென் எனினும் கண்டார் பழிப்பர்நாண் எத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்மாணிக்கமே, என் மணியே, மஞ்சனம் ஆட நீ வாராய்
தொழுவத்துல நீ விளையாடி, உடம்பெல்லாம் புழுதியோட நீ வர்றதைப் பாக்கும்போது எனக்கு உகப்பாத்தான் இருக்கும். ஆனா பிறத்தியார் 'என்ன பிள்ளை வளர்த்திருக்கா இந்த யசோதை'ன்னு பழிப்பாங்க. உனக்கோ வெக்கங்கெட்டவனே, உன் கேர்ள்ஃப்ரெண்ட் நப்பின்னை கூட உன்னையப் பார்த்தா சிரிப்பா. என் மாணிக்கமே, என் மணியே, குளிக்க வா கண்ணா.
சென்ற வருட இடுகை
Nice post! A couple of questions: What does 'உகப்பாத்தான்' mean? Also, what is 'நப்பின்னை'?
ReplyDeleteஉவப்பு is joy. பேச்சுவழக்குல (மதுரை பக்கம்) உகப்பு-ன்னு சொல்லுவாங்க.
ReplyDeleteஉவப்பாகத் தான் இருக்கிறது -> உகப்பாத்தான் இருக்கு
யசோதையின் அண்ணன் மகள் நப்பின்னை
நப்பின்னை கொஞ்சம் controversy உள்ள topic. நிச்சயமா அது கிட்டன் மாமன் மகள் தானா?
ReplyDeleteLike Gounder there is calvin & hobbes for every situation that one shall ever encounter.
Lovely. Enjoyed, visualising the scene. :)
ReplyDelete