உண்மை கசக்காது, வழுக்கும்

சில அரசியல் கருத்துக்களை உடனுக்குடன் பதிவு பண்ண வேண்டியது அவசியமாப் போகுது:

'கழுதை தோக்கப்போறோம். பொதுமக்கள்ட்ட திட்டு வேற வாங்கணுமா'ன்னு தலைவர் தோணி மாப்பு கொடுத்தாப்ல.

அதைக் கண்டும்காணாம விடாம நோண்டி நோண்டி கேட்டு 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்'னு மீடியா கூவிட்டாய்ங்க.

சரி அத்தோட விடுவாய்ங்கன்னு பார்த்தா, 'அந்த எடத்துல நீ இருந்தா' ன்னு வர்றவன் போறவன்ட்டல்லாம் கேட்டு படுத்தினாய்ங்க. 'நாங்களும் அப்படித்தான் செஞ்சிருப்போம்னு' அவிஞ்ஞ குருநாதர் ஆண்டிமலரார் மெயின்டேன் பண்ணிருக்கிறது பெருங்காமெடி.

அனா நோட் தி பாயிண்ட்: அவரும் 'சச்சினை இப்படி அவுட் ஆக்கியிருந்தா ரத்த ஆறு ஓடும், அதனால செஞ்சிருப்போம்' அப்படின்னு தான் சொல்லிருக்காப்ல. இதுல எங்க வந்தது ஸ்பிரிட்டுங்கறேன்.

உண்மைவிளம்பின்னா அது எங்க அண்ணன் ஸ்ட்ராஸ் தான். உசேன்பாய் 'நீ செஞ்சிருப்பியா'ன்னு தேஞ்சுபோன ரெக்கார்டாட்டம் கொடாயசொல்லொ, 'செஞ்சிருப்பேன்னு நினைக்க ஆசைப்படுறேன்'ன்னு கமலஹாஸர் கணக்கா சொல்லிட்டாப்ல. இதுனால தான் இவைஞளை ரொம்ப புடிக்கிது.

ராம்சாமி கோப்பை எடுத்து வை!

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Drums Mani

Kamal - the writer/director