ந்யாயம்
கரந்திருந்து ராவகன் சரந்தொடுத்த தால்கொலோ புரந்தரந்தன் மைந்தனும் நிரந்தரத்தி லொன்றினான் வரந்துரப்ப தாதையாற் சுரந்துணிந்த மைந்தனின் பரந்தமைந்த வில்லெழு மரந்துளைத்த வண்ணமாய் உரந்தணிந்த வர்ச்சுனன் இரந்துணர்ந்த கீதையாற் கரந்திணிந்து கௌரவர் திரந்தொலைந்து போயினார் உரந்தெளிப்ப தும்பயிர் தரந்திளைப்ப தும்பணி சிரந்திணிந்த கீழ்மைகொல் நிரந்தராயெ நாதியே வகை: எண் சீர் விருத்தம் அடி: கருவிளங்காய் கூவிளம் என்ற பிணை X 4 பதம் பிரித்து கரந்து இருந்து ராவகன் சரம் தொடுத்ததால் கொலோ புரந்தரந்தன் மைந்தனும் நிரந்தரத்தில் ஒன்றினான் வரம் துரப்ப தாதையால் சுரம் துணிந்த மைந்தனின் பரந்து அமைந்த வில் எழு மரம் துளைத்த வண்ணமாய் உரம் தணிந்த அர்ச்சுனன் இரந்து உணர்ந...