நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
மண்நசையும் பொன்நசையும் ஒண்ணசையும் ஒன்றிசைய மண்ணசையும்
புண்நசையும் மன்நசைய எண்டிசையும் தன்னிசையே என்றுசெயும்
விண்ணிசையா தென்நசையும் நன்நசையோ புன்நசையோ என்னசெயும்
விண்நசையை என்நசையாய் உண்நசைய கண்ணசையாய் வண்ணசையே
வகை: கலித்துறை
ஓசை: ஏந்திசை செப்பலோசை
பதம் பிரித்து
மண் நசையும் பொன் நசையும் ஒண் நசையும் ஒன்று இசைய மண் அசையும்
புண் நசையும் மன் நசைய எண் திசையும் தன் இசையே என்று செயும்
விண் இசையாது என் நசையும் -நன் நசையோ புன் நசையோ - என்ன செயும்?
விண் நசையை என் நசையாய் உள் நசைய கண் அசையாய்! வள் நசையே!
உரை
மண் நசையும் பொன் நசையும் ஒண் நசையும் ஒன்று இசைய மண் அசையும்
மண் மீதான விருப்பமும்
பொன் மீதான விருப்பமும்
(ஒண் = அழகு) அழகு மீதான விருப்பமும்
(இசைய = பொருந்த) ஒன்றாக பொருந்தும்போது
மண் அசையும்
When the desire for land, gold and beauty come together well - the earth is turned over.
புண் நசைஇ மன் நசைய எண் திசையும் தன் இசையே என்று செயும்
புண்ணை விரும்பும் மன்னன் நசைய - வீரத்தழும்பேற்கத் துணியும் மன்னன் விரும்ப
எண் திசையும் - எட்டு திக்குகளிலும்
தன் இசையே என்று செயும் - தன் புகழே பரவுமாறு செய்வான்
The King who loves dangerous challenges, will have his fame spread far and wide, if he so likes
விண் இசையாது என் நசையும் -நன் நசையோ புன் நசையோ - என்ன செயும்?
விண் இசையாது - வானவர் விருப்பமில்லையெனில்
என் நசையும் - எந்த ஒரு விழைவும்
நன் நசையோ புன் நசையோ - நல்ல விருப்பமோ கீழ்மையான விழைவோ
என்ன செயும்? - அந்த ஆசை என்ன சாதித்துவிடமுடியும்?
Whether a honourable or base, all desires are inert without Divine Will?
விண் நசையை என் நசையாய் உள் நசைய கண் அசையாய் வள் நசையே
விண் நசையை - தெய்வ சித்தம் எதுவோ
என் நசையாய் - (அதை) என் விருப்பமாக
உள் நசைய - என் உள்ளத்தில் ஆத்மார்த்தமாக நான் விரும்ப
கண் அசையாய் - (அருளி, அதற்கு சமிக்ஞையாகக்) கண் அசைக்கமாட்டாயோ
வள் நசையே - (இவ்வுலகத்தின் இயக்கசக்தியாக இருக்கு) மஹா இச்சையே
Glance at me and grant
Thy Wish as that my heart should truly desire
O Thou who is the
All animating Desire
Comments
Post a Comment