Posts

Showing posts from August, 2022

ஒரு தேரில் இரு கிருஷ்ணன்கள்

Image
உத்யோக பர்வத்தில் ஒரு இடம். பார்த்தனுக்கு சாரதியாக இருக்க கிருஷ்ணன் சம்மதித்துவிட்டான் என்ற செய்தி அறிந்த த்ரிதராஷ்ட்ரர் புலம்புகிறார்: ஒரு ரதத்தில் இரு கிருஷ்ணன்களும் (அர்ஜுனனும் கரிய நிறத்தவன் என்பதால் அவனுக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் உண்டு), காண்டீபமும் சேர்ந்துவந்தால் நிகழப்போகும் தாக்குதலை யாராலும் தாங்கமுடியாது என்பது எனக்குக் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இதைக் க்கௌரவர்கள் உணரவில்லையே , என்று அங்கலாய்க்கிறார். காங்குலியின் மொழிபெயர்ப்பில் : We hear that the two Krishnas on the same car and the stringed Gandiva,--these three forces,--have been united together. As regards ourselves, we have not a bow of that kind, or a warrior like Arjuna, or a charioteer like Krishna. The foolish followers of Duryodhana are not aware of this. O Sanjaya, the blazing thunderbolt falling on the head leaveth something undestroyed, but the arrows, O child, shot by Kiritin leave nothing undestroyed. Even now I behold Dhanajaya shooting his arrows and committing a havoc around, picking off heads from bodie...

யாரென்று தெரிகிறதா

Image
  வ்யாஸபாரதத்தில் சிறப்பாக சில இடங்களில் ‘க்கூட ஶ்லோகங்கள் ’  வரும். அதாவது நேராக படித்தால் பொருளற்ற சொற்றொடர் போலவும் ,  பிரித்துப் படித்தால் பொருளுணரும்படியாகவும் அமைக்கப்பெற்ற ஶ்லோகங்கள்.   இவை பிரிமொழி ஶ்லேஷத்திலிருந்து (சிலேடை) வேறுபட்டவை. சிலேடையில் இருவேறு பொருள்கள் வரும். ஆனால் (நான் புரிந்துகொண்டவரை) க்கூட ஶ்லோகத்தில் மறைபொருள் புரியாவிடில் மிஞ்சுவது பொருளற்ற சொற்றொடரே.    இவ்வாறு அமைத்ததற்கு ஒரு அழகான புராண விளக்கம் உண்டு.  வ்யாஸர் சொல்லச்சொல்ல எழுத்திலாக்குவதற்கு ஒப்பிய விநாயகர் வைத்த ஒரே நிபந்தனை: புரியவில்லையென்றாலொழிய எழுத்து வேகம் குறையாது ,  ஆனால் தான் எழுதும்வேகத்துக்கு வ்யாஸர் சொல்லவேண்டும் என்பதே, அது. ( Painting by Sri Keshav ) அதனால் வ்யாஸர், தனக்கு சிந்தித்துத் தொகுத்துக்கொள்ள நேரம்வேண்டி ,  விநாயகவேகத்தை மட்டுப்படுத்த எழுதியவை இந்த கூட ஶ்லோகங்கள் என்பர். அவ்வகை ஶ்லோகங்களில் ஒரு ப்ரபலமானது: நதீ ³ ஜ லங்கேஶவனாரிகேதுர்னகா ³ ஹ்வயோ நாம நகா ³ ரிஸூனு: இது சிறப்புறுவது, கதையில் இது தோன்றும் கணத்தால்: விராட பர்வத்தில் வெட்சிப் ப...