ஶிவஸ்துதி
இக்ஷுஹ்தனு மோஹஷர மத்ஸ்யத்வஜ தஹன
தக்ஷஶிர நாஶவிர பத்ரபய ஹரண
பக்ஷிகுல ராஜபதி நித்யமன ஶயன
வ்ருக்ஷகுரு வேதஃபல நிஶ்சலன நடன
வகை: கலிவிருத்தம்
சந்தம்: தானனன தானனன தானனன தனன
பொருள்
கரும்புவில்லும் காமபாணமும் மீன்கொடியும் கொண்டவனை எரித்தோனே
* வீர --> விர (குறைத்தல் விகாரம்)
அலகிடல்
இக்/ ஷுத/னு மோ/ஹஷ/ர மத்ஸ்/ யத்/ வஜ தஹ/ன
தக்/ஷஶி/ர நா/ஶவி/ர பத்/ரப/ய ஹர/ன
பக்/ஷிகு/கல ரா/ஜப/தி நித்/யம/ன ஶய/ன
வ்ருக்/ஷகு/ரு வே/தஃப/ல நிஶ்/சல/ன நட/ன
வாய்ப்பாடு: கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் புளிமா
அடிக்கு 15 எழுத்துக்கள் (ஒற்று நீக்கி)
(ஓரளவு) தனித்தமிழில்
கன்னற்சிலை ஐம்பூங்கணை வாளைக்கொடி கண்தீப்பட வெரித்தோய்
மன்னன்தலை பின்னப்பட பத்ரன்விடு தேவேபய மொழித்தோய்
சென்நீர்முனை புள்ளின்இறை மாலின்மனத் தேநித்தமுங் கிடந்தோய்
முன்னோர்மறை வித்தேநெடு வாலத்தடி கோவேகளி நடித்தோய்
வகை: கலித்துறை
சந்தம்: தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி புளிமா
ஓசை: தூங்கல் ஓசை (வஞ்சித்தளைகள்) விரவி வந்த கலித்துறை!
கேட்டு மகிழ:
பொருள்:
வெரித்தோய் - எரித்தோய் (எரித்தவனே)
ஐம்பூங்கணை - தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, கருங்குவளை ஆகிய ஐந்து பூக்களால் ஆங்கிய காமனின் அம்பு
மன்னன் - தக்கன் (தக்ஷன்)
பத்ரன் - வீரபத்திரன்
சென்நீர் முனை - ரத்தம் தோய்ந்த கருடனின் அலகுமுனை
முன்னோர் மறை - ருஷிகளின் வேதம்
நெடு வாலத்தடி கோவே - நெடிய ஆலமரத்து அடியில் அமர்ந்த தலைவனே (ஆலமர்ச்செல்வன் - தக்ஷிணமூர்த்தி)
களி நடித்தோய் - ஆனந்த நடனம் ஆடியவனே
Comments
Post a Comment