உண்டு இல்லை
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற கச்சிதமான இரட்டைப்புளுகு வரிகள் வழியே அறிந்ததாலோ என்னவோ நாமக்கல் கவிஞரைப் படித்ததில்லை. அந்தப்பாடலிலேயே தமிழின் கலாசாரத் தொடர்ச்சி பேசப்பட்டிருந்தாலும் (சங்கம் முதல் பக்தி வரை), அந்த முதல் இரு வரிகள் தரும் எழுச்சி இட்டுச்செல்லும் கீழிழுக்கும் சுழல் உக்கிரமானது. அதனாலேயே ஒரு மனவிலக்கம். படித்தவரையிலும் , பிற பாடல்களும் அப்படி ஒன்றும் பிடித்தவில்லை. குழந்தைகளுக்கு தமிழ் ஓசைநயம் அறிமுகமாக எளிமையான கவிதைகள் என்பதைத் தவிர பெரிய கவிதாதிரசனம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் சமீபத்தில் படித்ததில் பிடித்தது வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ் நிலப்பரப்பை வேறாய் ஆண்டு வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க அரசமுறை வகுத்த தல்லால் ஈங்குவட இமயம்வரை இந்தியரின் நாகரிகம் ஒன்றே யாகும் ; தாங்கள்ஒரு...