நல்லார் உளரேல்

ப்ரிய ஸஹோதரி க்றிஸ்டென் ரூபனியன்,


                                                                   தாங்கள் ஸ்ருஷ்டித்த ஸாஹித்யங்களான மார்ஜர வ்யக்தி (பூனையாள்), சத்புருஷன் (நல்லான்) ஆகியவற்றை அடியேனேன் அநுபவிக்க பாத்யபட்டது. இதுகாறும் யுவ ஸாஹித்ய லக்‌ஷணங்கள் பற்றிய எமது ந்யாயமான முன்னபிப்ராயங்களை ஸுலபமாக கடந்தமைக்கு என் கரகோஷங்கள்.





 இன்றைய நாளில், குறிப்பாக அமெரிக்கா போன்ற பஸ்ச்சிம தேஶங்களில் - ஸ்வாதீன கொள்கையே ப்ரதானமாகிப் போய்விட்ட ஸ்திதி யாவரும் அறிந்ததே. எம் தேஶத்து ருஷிகளின் தபோனுக்ரஹத்தால்,ஸ்வாதீன கொள்கை இங்கு பூரண ஜெயமடையாது என்று  ப்ரார்த்தனாஸ்வப்னம் காண்பார் உளோம். ஆனால், அனுதின ஸூர்யாயணத்தைப் போன்றே, கலாசாரமும் குணமிருந்து குடவழிப்போம் என்பாருமுளர். ஆதலால், எம்மனோரும்  நும்முலகின் நுண்விரிப்புகளை அவதானித்தல் அவஶ்யம் என்பாரவர்.

இந்நோக்கில் தங்களது ௸ ஸாஹித்யங்களை அவதானித்து, அவற்றைப் பற்றிய வாஸகாநுபவங்களை ஸமர்ப்பிக்க யத்தனித்தேன். ஆனால் கலாசார வ்யத்யாஸங்களின் மஹாதூரத்வம் உணர்கிறேன். பூரண விமர்ஜன வ்யாஸமாக எழுத த்ராணியிலேன். (தற்சமயம் துர்ப்ராபல்யம் அடைந்துவிட்ட) புருஷவ்யாக்யானம் என்ற உபகரணத்தை அனுஷ்டித்து, சில வார்த்தைகளை மட்டும் ஸமர்ப்பிக்கிறேன்.


ஜீவப்ரயாணத்தில் பரஸ்பர சஹாயத்தை உத்தேசித்தும், ஸந்தான ஸம்ரக்‌ஷணத்தை உத்தேசித்துமே புருஷ-ஸ்த்ரீ ஸம்பந்தத்தை பித்ருகள் அனுஷ்டித்தனர். இதை இப்படி சொல்வதை, பத்தாம்பஸலித்துவமென பரிகாசஞ்செய்வோரே லோஹத்தில் இன்று அனேகர்.  மேலும், லோகக்‌ஷேமத்துக்காகவே பயாதி ஸ்த்ரீலக்‌ஷணங்கள் வரையப்பட்டதை சுட்டுதல் புருஷாதிக்க மனோபாவமென்று கொள்ளப்படுகிறது.



இந்த ஸ்திதியில் இதை எழுதுவதுகூட வீரதீரஸாகஸமே!

அமெரிக்கா போன்ற ஸ்வாதீன ஸமூஹத்தில், ஸயன ஸல்லாபங்களுக்கு, விவாஹம் அவஶ்யமில்லை என்பது பழங்கதை; இன்று பரஸ்பர மானஸோல்லாஸ அந்நியோன்யமே கூட  அவஶ்யமில்லை என்ற துர்ஸ்திதி அடைந்தாகிவிட்டது. வ்ருத்தஜன ஆஸீர்வாத மார்க்கமாயல்லாமல், தேஹஸம்பந்தத்தை ஸ்வாதீனமாக ஸம்பாதிக்கும் துர்கதியில்,  அனேக சாதுர்ய ஸூக்‌ஷுமங்கள் ப்ரயோஹிக்கப்பட வேண்டிய அவஶ்யம் ஏற்படுகிறது.


இதைத்தான் பஸ்ச்சிம ஸாஹித்ய முக்யர் ஸர்.வால்டர் ஸ்காட் இதைத்தான்:  "Oh, what a tangled web we weave, when first we practice to deceive!"  என்றார்.

ஆனால், தொடர் ஸூக்‌ஷுமப் ப்ரயோகம் பந்தங்களை க்‌ஷீணித்தே தீரும். நாள்பட நாள்பட ஸூக்ஷுமம் நுண்மையாகி, பந்தங்களில் ஸாதாரணத்வத்தை அரிதாக்கி, இருபாலாருக்கும் ஸந்தேஹ ஜ்வாலை முடுக்கி, ஸம்பாஷணைகளிலும்- ஏன் ஸம்பந்தகளிலுமே கூட- அநுசரணையை முற்றிலும் விலக்கி சாதுர்யத்தையே ப்ரதானப்படுத்தும். ஆத்மார்த்தமும், அதன்வழி பூரண ஸமர்ப்பணமும்  ஸர்வஸஹஜமாக கைகூடுவதற்கு பதில், அவற்றை எட்டாக்கனியாக்கும். இது ஸம்பவிப்பது சிலருக்கோ, அனேகருக்கோ அல்ல, எல்லோருக்கும். ஏனெனில் ஸ்வாதீன கொள்கையின் கதியே அது.

இச்சூழலில், மனக்லேசங்களையும், சிந்தனை-வாக்கு வ்யத்யாஸங்கள் பற்றி தத் ரூப சித்ரங்கள் ஸ்வாரஸ்யமே. ஸ்வய ஸம்பாத்யமான பந்தங்களின் அச்சமய ஸ்திதி ஈதென வரையறுக்க முயங்குவோர் தயங்குவதும், பிற பந்த ஸாத்யங்களை கருத்தில் கொண்டு வரையறைகளை நிர்ணயிக்க இருபாலாரும் தயங்குவதும், வரையறைகளை தளர்வாக அமைப்பதில் இருபாலாரில் யார்க்கும் எப்போது மேற்கை ஓங்குகிறது....போன்ற சித்தரிப்புகள் யாவும் ரஸமானவையே. ரஸமாக இருப்பினும் - குறைவுள்ளவையே. இதுகாறும் வாக்யப்படாத அந்தரங்கத்தை வாஸிக்கக் கிடைக்கும் ஆரம்பநிலை வாஸகர்கள் ரோமாஞ்சக ரஸாநுபாவம் பெறலாம், ஆனால் அத்தகு ஸ்ருஷ்டியின் எல்லையும் அதுவே.

ஸமஸ்யைகளுக்கு அறுதியான விமோசங்கள் காட்டுவதல்ல ஸாஹித்யத்தின் வேலை. என்றாலும், ப்ரக்ருதியின் ஹீனத்துவத்தை ஸமஸ்யையாக காண்பிப்பது பூரண ஸத்யமோ?  ஸ்வாதீனகொள்கையை ஆக்‌ஷேபத்துக்கு அப்பால் வைப்பதன்றோ அது?

சிந்தனாவிஸ்தீரணம் ஸாஹித்ய லக்‌ஷணம்.

இவ்விரண்டுடன் பிறசேர்த்து ஒரு புஸ்தகம் ப்ரதம ப்ரஸுரமாகயிருப்பதாகவும், அதற்கு பூரணமாக லக்‌ஷ்மி கடாக்‌ஷம் ஸித்தித்திருப்பதாகவும் அறிந்தோம். அதற்கு  புரஸ்காரங்களும், தங்கள் கலாஸ்ருஷ்டி ஜீவிதம் ஸௌகர்யம் பெற ஏதுவான அனுகூலங்களும் ஸரஸ்வதி கடாக்‌ஷத்தால் அமைய ப்ரார்த்திக்கிறேன். 

Comments

  1. Dravidian's culture

    ReplyDelete
    Replies
    1. முகமிலியாரே, ராங் நம்பர் டயல் செய்துவிட்டீர்.

      யாழோர் கூட்டமும் கற்பில் முடியும் தன்மைத்தே

      Delete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director