திருபுராந்தகன்
இம்முறை சிவராத்திரிக்கு, திருபுராந்தக புராணம் பற்றி ஒரு சின்னஞ்சிறு பாடல்:
பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
Last year's post: http://dagalti.blogspot.com/2019/03/blog-post.html
அரக்கர் மூவரின் அயில்தாக்கிட புரந்தரன் தலை பல தேவரும்
வருந்த ஈசனும் செறுஏகினான் வருந்த ஈசனும் செறுஏகினான்
பரந்த வையகம் ரதமாகிட பரிதி சந்திரன் உருளாகிட
அரிய நான்மறை பரியாகிட பிரம சாரதி வழிகாட்டினான்
கிரிவ ளைந்தொரு சிலையாகிட பெரிய வாசுகி சிலைநாணிட
கரிய மாலவன் கணையாகிட சுரர னைவரும் தமராலுரு
பெருமை எண்ணிட நுதல்நேத்திரன் முறுவலித்திட எரிதாக்கிட
திருபு ரங்களும் பழுதாகிட விரிச டையொடு நடமாடினான்
பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
Last year's post: http://dagalti.blogspot.com/2019/03/blog-post.html
Comments
Post a Comment