திராவிடப் பிதாமஹர்
சிந்தாமணியைப் பதிப்பிக்கும் பொருட்டு உ.வே.சா சென்னை வருகிறார். அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு சக்கிரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (இவர் வேறு) வந்து, அவர் நன்கு ஆய்ந்து உரை எழுதி இருப்பதை பாராட்டுகிறார்
“எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அதன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன்.
- என் சரித்திரம்,
அத்தியாயம் 95
Comments
Post a Comment