தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
சமீபத்தில் அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக் கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)