Posts

Showing posts from April, 2017

34

I have never been able to understand where people got the idea that democracy was in some way opposed to tradition. It is obvious that tradition is only democracy extended through time...It is the democracy of the dead. Tradition refuses to submit to the small and arrogant oligarchy of those who merely happen to be walking about. All democrats object to men being disqualified by the accident of birth; tradition objects to their being disqualified by the accident of death. .... Poetry is sane because it floats easily in an infinite sea; reason seeks to cross the infinite sea, and so make it finite. The result is mental exhaustion... To accept everything is an exercise, to understand everything a strain. The poet only desires exaltation and expansion, a world to stretch himself in. The poet only asks to get his head into the heavens. It is the logician who seeks to get the heavens into his head. And it is his head that splits. - GK Chesterton, Orthodoxy  ஜனநாயகம் பாரம்பரியத...

இரு நிலாக்கவிதைகள்

பசி-கிள்ளி அழுகிற பசுங்கிளி குழந்தையின் அழுகையை அமர்த்து அமர்த்த - டம்ளரில் மணியடி, தாலாட்டு பாடு, தோத்தோ கூப்பிடு, பூனைக்கு பூச்சாண்டிக்கு பின்னணி குரல் கொடு கழுதை  என்னமும் செய். எனக்கொன்றும் இல்லை ஆனால் ரேழிக்கு வந்து நிலாக் காட்டாதே. காட்டினால் எட்டு நாளைக்கு முன் தட்டில் பூத்த இட்டிலி ஞாபகம்  அதற்கு வரும். எல்லோரும் ஏறினால் அப்புறம் அழுகைப் பல்லக்கை யார் சுமப்பார்கள்? - கல்யாண்ஜி கவிதை: அழுகைப் பல்லக்கு தொகுப்பு: புலரி உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்     ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை     நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  - பாரதிதாசன் புரட்சிக்கவி

பழையன கழிதலும் புதியன புகுதலும்

(ஹிந்து மதஞானிகள்) யாரும் ‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று பிரசாரம் செய்யவில்லை. ‘மனிதர்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள்’ என்றே பிரசாரம் செய்தனர். இது யாரையும் தொந்தரவு செய்யாத கருத்து என்பதால், இதை நம்புவதில்லோ, பிரசாரம் செய்வதிலோ யாருக்கும் யாதொரு தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை.  ..... ஹிந்து சமுதாயம் ஒரு தார்மீக புத்துருவாக்கத்தை வேண்டி நிற்கிறது; அதைத் தள்ளிப் போடுவது ஆபத்து. இந்த புத்துருவாக்கத்தை தீர்மானிக்கவும், வழிநடத்தவும் வல்லவர்கள் யார் ?  தம்மளவில் அறிவுசார் புத்துருவாக்கம் பெற்றவர்களும் , அறிவுசார் விடுதலையின் வழியாக நம்பிக்கைகளைக் கட்டமைத்துக்கொள்ளும் நேர்மையும், உறுதியும் கொண்டவர்களும் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள்.   இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், நமக்குக் காணக்கிடைக்கும் ஹிந்து சமுதாயத் தலைவர்கள்  எவரும் இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் அல்லர். முதல்கட்ட அறிவுசார் புத்துருவாக்கம் அடைந்தவர்கள் என்று கூட அவர்களைப் பற்றிச் சொல்ல இயலாது. அப்படி ஒரு புத்துருவாக்கத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள் என்றால், பாமரப் பெருங்கூட்டத்தைப் போ...

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்...