ஒரு கவிதை
தி.வ.மெய்கண்டார் ஆசிரியராக இருக்கும் கவிதாமண்டலம் சனவரி 2013 இதழிலிருந்து ஒரு கவிதை
ரெண்டு திராபை stanza’க்கள் தாங்கினால் ஒரு கவிக்கணம் லாபம்.
ரெண்டு திராபை stanza’க்கள் தாங்கினால் ஒரு கவிக்கணம் லாபம்.
உவமைக் கவிஞர் சுரதாவின் ஒப்பிலா நூல் வேட்கை
- கவிவேந்தர் கா.வேழவேந்தன்
’உவமைகளே இல்லாத கவிதை யெல்லாம்
- கவிவேந்தர் கா.வேழவேந்தன்
’உவமைகளே இல்லாத கவிதை யெல்லாம்
உப்பில்லாப் பண்டம்தான்’ என்றே கூறி
சுவைக்கவிதை வடிவித்தவர்தான் சுரதா! அன்னார்
சொற்பொழிவோ தகவல்களின் சுரங்கப் பேழை!
எவைஎவற்றை எந்நாளில் எவர்ப டைத்தார்
எனும்விவரம் சொல்வதிலே கணினி ஆவார்
இவர்இந்தப் பேராற்றல் பெற்றார் என்றால்
ஏடுகளைத் தேடிநிதம் படித்த தால்தான்
பழையநூல் தெருக்கோடிக் கடையை நாடிப்
பழையனூர்க் கவிஞர்இவர் படையெடுப்பார்
விழைகின்ற பனுவலெல்லாம் அள்ளிவந்தே
விருந்தாக சுவைத்திடுவார்; குறிப்பெடுப்பார்!
செழித்துவளர் இளங்கவிஞர் கூட்டத் திற்கே
செவிலித்தாய் இவர்தானே! அன்னார் ஓர்நாள்
எழக்கூட இயலாமல் படுத்தார் என்றார்;
ஏக்கமுடம் கலைஞர்நகர் இல்லம் சென்றேன்
ஒருவர்மட்டும் படுக்கின்ற படுக்கை மீதில்
ஒருக்கணித்துப் படுத்திருந்தார்; அவர்பக் கத்தில்
பெரியதொரு கோபுரம்போல் நூல்கள் கண்டேன்;
“பேசுதற்கு பொறுத்திடுங்கள், இந்த நூல்கள்
சரிந்துங்கள் உறக்கத்தை கெடுக்கும்”, என்றேன்;
“சாய்ந்தவையும் வீழ்ந்தென்னை எழுப்பி னால்தான்
அரும்நூல்கள் அத்தனையும் முடிப்பேன்!” என்றார்
ஆருயிரைப் புத்தகத்துள் ஒளித்த செம்மல்!
வர்ஜாவர்ஜியம்
இல்லாமல் எல்லாவற்றையும் படிக்க முயன்று இண்டு இடுக்குகளில்
ஒளிந்திருப்பவற்றை அகழ்ந்து, வாழ்நேரத்தை தொலைப்போம் வாரீர்.
Comments
Post a Comment