Death of the Author
சிறுகதை ஆகியிருக்கவேண்டிய சிந்தனைத் தெறிப்பை ' அப்படியே சாப்பிடுங்கள் ' என்று தருகிறேன். எனது சோம்பல் தமிழ் வாசக உலகின் நல்லூழ். --------------------------------------------------------------------------------- தமிழ்போர்னோவின் அவல நிலை பார்த்து, நிவர்த்தி செய்ய ஒரு நற்றொடர் எழுதத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். மானங்காக்க புனைப்பெயர் தரித்தெழுதுகிறான். உயர்சரக்குக்குத் தகுந்த சிலாகிப்பு கிட்டுகிறது.தன் புனைப்பெயர் மீதே பொறாமைப்படுகிறான். அதே நேரத்தில் திரைவிலக்கவும் தயக்கம் - ஏனென்றால் அவனது பேசுபொருள் அப்படி - ஏற்கனவே வாசகர்கள் மத்தியில் அவனுடைய க்ரியா ஊற்றைப் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. அந்த genreக்கே உரித்தான incredulousness, fantasyத்தன்மையை தவிர்த்து ஒரு authenticyஐ அவன் கொண்டு வருவது தான் அவனது appealஆக இருக்கிறது. 'இத்தனை authenticity கற்பனையால் சாத்தியம் இல்லை' என்று வாசகர்கள் நினைக்கிறார்கள். " Either he lives a life of unbridled experiences or possesses an imagination fueled by unreal levels of perversion. Either case, his is so good that his pers...