மலையரையன் பெற்ற மடப்பாவை
சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையில் மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ என்று வஞ்சி நகரத்துப் பெண்டிர் பாடி வாழ்த்துகின்றனர் கண்ணகிக்கு சிலை வடிக்க, வடக்கே சென்று கல் எடுத்து, அக்கல்லை கனக-விசயரின் தலையில் வைத்துக் கொணர்ந்த, தங்கள் மன்னனான சேரன் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்த்துகின்றனர். இதில் 'மலையரையன் பெற்ற மடப்பாவை' என்ற சொற்றொடர் என்னை ஈர்த்தது. சிலம்புக்கு சிறப்பான உரை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அதை இவ்வாறு விளக்குகிறார். மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ - மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க. இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். என்று விளக்குகிறார். இவ்விளக்கம் எனக்கு நிறைவளிக்கவில்லை. வடக்கே இமய மலையினின்று கல் எடுத்துப் படிமம் செய்ததால், மலையரையன் பெற்ற , என்ற பொருள் பதிந்துவிடுமா என்ன? படிமத்துக்கான அக்கல் எந்த பாண்டியன்? நாம் நினைவில் வைத்துக...