கற்பில் இரவுக்குறி இடையீடு
பீடிகை : தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு எனக்கு மிகப்பிடித்த குறள்களில் ஒன்று நமது மெய்யியல் புலத்தில் வழங்கிவரும் த்ரிவர்க்க பகுப்புகளான: தர்மம்-அர்த்தம்-காமம் (முறையே அறம், பொருள், இன்பம்) ஆகியவை ஒன்றுதிரண்டு வரும் குறள் இது. இப்போது இக்குறளைக் குடலாபரேஷன் செய்வோம்: பருண்மையான பொருட்களை உவமையாக்கி கருத்துகளைப் புலப்படுத்தும் உத்தியை நாம் கவிதைகளில் காணலாம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமை, தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - அறிவு). ஆனால் இங்கு தலைவன் இங்கு விவரிப்பது தலைவியை அணைப்பதை. அழகிய மாமை நிறத்தாளை, அரிவை பருவத்தாளை அணைத்தல் (பருண்மை) எத்தகையது? ஒருவன் தனக்கு சொந்தமான இல்லத்தில், தனக்கு உரிய உணவை உண்ணும் இன்பத்தைப் போன்றதாம். பொருட்செல்வத்தை, அறத்தின் வழி நின்று நுகர்வதைப் போல இவளை அணைத்தல், என்ற வருணனையின் நுட்பத்தை என்னவென்பது. Propriety, moderation என்ற வழக்கொழி நிலையெய்திய கல்யாண குணங்களைத் தன்னுள் குறுகத் தரித்த குறள். சரி இதுக்கென்னப்பா இப்போ? சொந்த ஸாஹித்யத்து க்குப் பீடிகை ஸ்வாமி தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்...