Posts

Showing posts from April, 2023

40

Image
நாற்பதில் கனிவு மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மேலதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டார் ராமாராவ். “ ஹேப்பி ரிடர்ன்ஸ்! உங்களுக்கு நாற்பது ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை ” பேருந்துநிறுத்தத்தை நோக்கி சாலையில் நடந்த ராமாராவ், சற்று நின்றார்; முடிதிருத்தகம் ஒன்றின் வாசலை அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டு, “ பார்த்தால் நாற்பது போல் இல்லைதான் ” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு நடந்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது, மறுநாள் பிறந்தநாள் என்று அவருக்கு நினைவில்லை. ஒரு அலுவல் குறிப்பை எழுதும்பொழுது தான் மறுநாள் ஏப்ரல் 14ம் தேதி என்பதை உணர்ந்தார்.  பொதுவாக பிறந்தநாட்களுக்கு வீட்டில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இது ஒரு சிறப்பான நிகழ்வு. நாற்பதைக் கடப்பது முக்கியமான மைல்கல், விடுப்பெடுத்து கொண்டாடத் தகுதியானது தான். பாரிமுனையில் தள்ளுமுள்ளைச் சமாளித்து பேருந்தில் ஏறி, கைப்பிடியைப் பற்றித் தொங்கிக்கொண்டார். “ நல்லவேளை, ஒருகாலத்தில் குரங்குகளாய் இருந்தோம் ” என்று எண்ணிக்கொண்டார். “ இல்லையெனில்  அசல் குரங்குச்செயல்களான இடிப்பதும், தொங்குவதும் எ...