Posts

Showing posts from September, 2022

அறத்தை ஆக்குவது

தொல்காப்பியம் வேற்றுமையிலில் 2ம் வேற்றுமை உருபான ஐ உருபு பொருட்படும் இடங்களை சேனாவரையர் விளக்குகிறார் காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஒப்பின் புகழின் பழியின் என்றா பெறலின் இழவின் காதலின் வெகுளியின் செறலின் உவத்தலின் கற்பின் என்றா அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா ஆக்கலின்  சார்தலின் செலவின் கன்றலின் நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின்   ....  மேற்குறிப்பிட்ட    சொல்லதிகாரம் 72வது நூற்பாவில்  காப்பு (காத்தல்), ஒப்பு (ஒத்தல்)... என 28 இடங்களின் ஐ உருபு பொருள்படுவதைக் கூறுகிறார் இவை மூன்று வகையான பொருள்கள் 1.      இயற்றப்படுவது (i.e. உண்டாக்கப்படுவன)  a.      இழைத்தல் -> எயிலை இழைத்தான் (எயில் என்றால் சுவர்) 2.      வேறுபடுக்கப்படுவன ( i.e.  தன் இயல்பில் இருந்து திரிந்தன) a.      அறுத்தல்  à  நாணை அறுக்கும் (ஏற்கனவே இருந்த கயிறு எனும் பொருளை அறுத்து அதன் இயல்பை மாற்றுவது) 3.      எய்தப்படுவன (பொர...