சங்கர விருத்தம்
Following the principle of, have blog, will archive:
மந்தனர் அலங்கல் வாட மறைகளை அளவை என்னா
அந்தகர் வளமை தேய அறுவகை சமயம் மீள
சந்திரன் கதிரோன் மாட்சி சரியவே உதித்தார் போல
இந்தியத் திருநா டெங்கும் இவர்பதம் பதித்த வாரே
தர்க்கவாதத்தில் மந்தன மிஸ்ரரின் மாலை வாடும்படியாக அவரை (யும் அதன் வழி மீமாஸத்தையும்) வென்றார்
வேதங்களை ப்ரமாணமாக ஏற்க மறுத்த, தத்துவார்த்த பார்வை குன்றியோரின் (ஶ்ரமணர், பௌத்தர், லோகாயதர் போன்றோர்) ஆளுமையை குன்றச் செய்த்கார்
ஷண்மதத்தை மீட்டார்
கதிரவன் சாய, ஒளிமங்கி இருள் ஏறும் காலத்தே மதி (கதிரவனின் ஒளி வாங்கி) ஒளிபாய்ச்சி மீட்பது போல
இந்தியத் திருநாடெங்கும் (சங்கரர்) கால் தடம் பதித்தார் (மந்தகதி எய்திய வேதகதியை மீட்டார்)
This is a beautiful and inspiring description of Sankara's impact on Indian thought.
ReplyDeleteThank You!
Delete