உ.வே.சா மொழிபெயர்த்த போஜஸ்துதி


போஜராஜாவைப் பற்றி 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜப்பிரபந்தம்.
அதில் ஒரு சுலோகம் பின்வருமாறு:

நகர்வலம் வரும் போஜர், ஒரு பிராமணர் தோலால் செய்யப்பட்ட கமண்டலத்தில் நீர்கொண்டு வருவதைக் காண்கிறார். இவ்வாறு தோல்பொருட்களில் நீரைக் கொண்டு வருவது அவருக்கு அனாசாரம் அல்லவா, என்று வினவ, அதற்கு அவர்:

வழக்கமாக கமண்டலம் செய்யும் இரும்பும், செம்பும் போஜர் ஆட்சியில் அருமையாகி விட்டன, என்கிறார். 'போஜர் ஆட்சியில், சாசனங்கள் எழுதியே செம்பும், அடக்கப்பட எதிரிகளை பிணைக்கும் சங்கிலிகள் செய்யவே இரும்பும் அருமையாகிவிட்டன. 

என்ற பொருள்படும்படி கீழ்க்கண்ட சுலோகத்தைப் பாடுகிறார்


asya śrībhojarājasya dvayam eva sudurlabham | 
śatrūṇāṃ śṛṅkhalair lohaṃ tāmraṃ śāsanapatrakaiḥ || 

அஸ்ய ஶ்ரீபோஜராஜஸ்ய த்வயம் ஏவ ஸுதுர்லபம்
ஶத்ரூணாம் ஶ்ருங்கலைர் லோஹம் தாம்ரம் ஶாஸனபத்ரகை:

(not sure if the Tamil transliteration attempted above is correct. இந்த ஜென்மத்தில் நாகரி படிக்கமுடியப்போவதில்லை. ரோமன் லிபியில் சரணாகதி அடைவதற்கு முன், அவ்வப்போது இப்படி தமிழ்முரண்டு பிடிப்பேன்)

திருவாவடுதுறை மடத்தில் உ.வே.சா இருந்தபொழுது, மகாசந்நிதானமான சுப்ரமணியே தேசிகரைப் பார்க்க வந்த ஒரு சமஸ்கிருத பண்டிதர், இந்த சுலோகத்தைச் சொல்கிறார்.
உடனே உ.வே.சா அதைத் தமிழில் மொழிபெயர்க்கிறார்:

(கலித்துறை)

நேரார் பதத்துப் புனைவிலங் காலயம் நீங்கநிற்
சேரா துலர்க்கருள் சாஸனத் தாற்செம்பு தீர்ந்தவென்றால்
ஏரார்நின் நாட்டிடைப் போஜவித் தோலன்றி யானிதமும்
நீரா தரத்தோ டெடுப்பமற் றியாது நிகழ்த்துவையே


பதம் பிரித்தால்
நேரார் பதத்துப் புனை விலங்கால் அயம் நீங்க 
நின்சேர் ஆதுலர்க்கு அருள் சாஸனத்தால் செம்பு தீர்ந்த என்றால்
ஏரார் நின்  நாட்டிடை போஜ! இத்தோல் அன்றி யான் நிதமும்
நீர் ஆதுரத்தோடு எடுப்ப மற்று யாது நிகழ்த்துவையே

நேரார் - பகைவர்
அயம் - இரும்பு
ஆதுலர் - இரப்பவர்
ஆதரம் - அன்பு
நிகழ்குவையே - சொல்வாயாக

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director