மதநல்லிணக்க வெண்பா

தசாவதாரத்தையும் வெண்பாவின் கடைசி இரு அடிகளில் அமுக்கிக்காட்டிய ஒரு காளமேகப் பாட்டு பிரபலம்:

மெச்சுபுகழ் வேங்கடவா  வெண்பாவில் பாதியிலென்
இச்சையில் உன்சென்மம் எடுக்கவா -மச்சாகூர்
மகோலா சிங்காவா மராமா ராமமாரா
மாகோபா லாமா வாய்

மச்சா, கூர்மா, கோலா (வராகம்),  சிங்கா, வாம, 3 ராமா, கோபாலா, மா (குதிரை என்று பொருள்...அதில் வருக் கல்கியை குறிக்கும்)

காளமேகம் குறள்வெண்பாவாவே பாடிட்டார்.
நானும் ஒரு முயற்சி பண்ணேன். ஆனா இது நாலு வரி ஒருவிகற்ப இன்னிசை வெண்பா.

தசாவதாரம் - ஆனால் ஒவ்வொன்றும் திருமால்-சிவன் இருவருக்கும் பொருந்துமாறு பொருள்படும் சிலேடை:

மீனான் கடலீயக் கொண்டான் திருகொள்ளும்
ஏனத்தான் ஏறான் நெடியான் மழுகரத்தான்
மானெழில் ஏற்றான் வலுவழகன் மாயனே
மானேறித் தீர்ப்பான் கலி




Comments

  1. இன்று நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பிறகுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். மிக அருமை.

    சிலேடையெல்லாம் இப்ப யார் சார் எழுதுறாங்க! இந்த மாதிரி படிக்கக் கிடைச்சாதான்.

    மீனான்லயே அடிச்சுத் தூக்கீட்டீங்க. திருகொள்ளும் ஏனத்தான் அட்டகாசம்.

    எல்லாமே பொருந்தி வருது.

    ஒரு சின்ன கருத்து. மாயன் திருமாலுக்கு வரும் போது கருநிறத்தைக் குறிக்கும். மாயோன் என்ற பேருக்கே அதுதானே பழந்தமிழ்ப் பொருள். மாயன் - மாயத் திருவிளையாடல் சிவனுக்குப் பொருந்தும்.

    நிறைய எழுதுங்க சிலேடைகளும் பிற பாக்களும்.

    உங்க பின்னூட்டத்துக்கு நாளைக்கு மறுமொழியிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜிரா.

      பசுபதி சார் பத்து வருஷம் முன்னாடி ஹப்ல சொல்லிகொடுத்தப்போவே கத்துகிட்டு இருக்கலாம். ஏனோ உருப்படியா பண்ணாம விட்டாச்சு. இப்போ - காலம் போன காலத்துல - விட்டதை புடிக்கும் முரண்டு ஒண்ணு வருது அப்பப்போ :-)

      மாயோன் --> மாயன்

      சொல்லுங்க கேட்டுக்குறேன். ஆனா..இந்த பழந்தமிழ் ஃபிலாலஜியைப் பொருத்தவரை, உறுதியான ஒற்றையுண்மைகள் என எதையும் சொல்லிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

      Look forward to your responses in your blog.

      Delete
  2. This is so beautiful. Loved the way both Perumal and Shivan are compared using மான் மீன் மழு and ஏனம். I too tried one inspired by Kalamegha pulavar. Will dig that out and share with you on twitter.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மீண்டும் வருக.
      மேலும் தருக.

      Delete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar